கதறி அழுத பிக் பாஸ் வருண்! வீட்டில் நிகழ்ந்த துயரச் சம்பவத்தால் முழு குடும்பமும் சோகத்தில்
தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வீட்டில் நிகழ்ந்த துயரத்தை அடுத்து அவரது குடும்பத்தினருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் தாயாரும் பிரபல நகைச்சுவை நடிகர் ஐசரி வேலனின் மனைவியுமான புஷ்பா ஐசரி வேலன் வயது முதிர்வு காரணமாக நேற்று காலமானார்.
அவருக்கு வயது 75. மறைந்த புஷ்பா ஐசரி வேலனின் கணவரும் நடிகருமான ஐசரி வேலன் எம்ஜிஆர் நடித்த பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் அதுமட்டுமின்றி எம்ஜிஆர், அதிமுக என்ற கட்சியை தொடங்கியபோது அந்த கட்சியில் இணைந்து ஆர்கே நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஐசரி கணேஷின் பேரன் குடும்பத்தில் நிகழ்ந்த இந்த சோகம் தாளாமல் துக்க வீட்டில் இருந்தபடி தமது பாட்டியின் மறைவினால் அழுதுள்ளார்.
அவருக்கு இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பிரபலங்கள் ஆறுதல் கூறினர்.
