பிறந்த நாள் கொண்டாட்டத்தை நடுரோட்டில் கொண்டாடிய தொகுப்பாளினி! பாராட்டுக்களை குவிக்கும் காட்சி
பிரபல தொகுப்பாளினி பிரியங்கா நடுரோட்டில் குத்தாட்டம் போடும் காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிரியங்காவின் வி.ஜே பயணம்
பிரபல தொலைக்காட்சியில் அனைத்து மக்களுக்கும் பிடித்தமான வகையில் பல்வேறுப்பட்ட நிகழ்ச்சிகள் செய்து அதில் பிரபல்யமாக இருப்பவர் தான் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே.
இதனை தொடர்ந்து பிரியங்கா, சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக், ஒல்லி பெல்லி, பிக்பாஸ் ஜோடிகள் என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
image - News18
மேலும் பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கடந்த ஆண்டு முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக எலிமினேட் செய்யப்பட்டார்.
தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது தாமரையுடன் நிரூப்புடன் சேர்ந்து பல வகையான சர்ச்சைகளில் சிக்கினார்.
குத்தாட்டம் போடும் காட்சி
இந்த நிலையில், பிரியங்கா விடுமுறை தினங்களில் வெளிநாடுகளுக்கு சென்று அதனை சிறப்பாக கழித்து விட்டு வருவார்.
அந்த வகையில் நடுரோட்டில் இரவு நேரத்தில் குத்தாட்டம் போடும் காட்சியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
image - twitter
அதில், கருப்பு நிற ஆடைக்கு மேல் ரோஸ் கலர் கோட் போட்டு கொண்டு குத்தாட்டம் பிஜிஎம்மிற்கு நடனம் ஆடுகிறார்.
இதனை பார்த்த இணையவாசிகள், ரசிகர்கள் பலரும் பிரியங்கா அழகாக பேசுவது போல் நன்றாக நடனமும் ஆடுகிறார் எனவும் கருத்துக்களை பதிவு செய்தும் வருகிறார்கள்.