மகாபாரத்தையே கண் முன் கொண்டு வந்த பிரியங்கா.. அரங்கத்தை மிரட்டிய அந்த குரல்! யார் இவர்?
பிரியங்காவையும் அரங்கத்தையும் இரண்டு விநாடிகள் அமைதிப்படுத்திய சின்னத்திரை பிரபலத்தின் சாதனை வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிரியங்காவின் சாதனை
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் தொகுப்பாளினி பிரியங்கா.
தற்போது டிடிக்கு பதிலாக அந்த இடத்தை பூர்த்தி செய்து பல நிகழ்ச்சிகளை வித்தியாசமான முறையில் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிலையில் ஈரமான ரோஜாவே 2 என்ற சீரியலில் நடிக்கும் கதாநாயகர்கள் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களை வைத்து மியூசிக்குடன் தொடர்புபட்ட ஷோவை நடத்தியுள்ளார்.
கிருஸ்ணர் குரலின் சொந்தக்காரர்
இதில் மகாபாரத்தில் வரும் கிருஸ்ணனின் குரலுக்கு டப்பிங் கொடுக்கும் சின்னத்திரை பிரபலம் ஒருவர் கலந்துக் கொண்டுள்ளார்.
இவரின் குரலை கேட்டு அரங்கமே இரண்டு நிமிடம் வியந்து போய் நின்றுள்ளது.
இதனை தொடர்ந்து அவரை கட்டியணைத்து தங்களின் வாழ்த்துக்களை குறித்த பிரபலத்துடன் பகிர்ந்துள்ளார்கள்.