கணவரின் அளவுக்கு அதிகமான கட்டுபாட்டினால் சீரியலை விட்டு விலகும் பிரபலம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்
திருமணமாகி சில நாட்களில் சீரியலை விட்டு விலகப்போவதாக நடிகை பிரியங்கா கூறிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சீரியலில் அறிமுகம்
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகிய சீரியல்களில் ஒன்று தான் ரோஜா.
இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகியவர் தான் பிரியங்கா.
மேலும் சுமார் 4 வருடங்கள் வெற்றிகரமாக சென்ற நிலையில் கடந்த ஆண்டு நிறைவு பெற்றது.
இந்த நிலையில், ராகுல் என்பவரை காதலித்து ஒரு கோயிலில் சிம்பளமாக திருமணம் செய்து கொண்டார்.
இவரின் திருமண சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்ட போதிலும், பிரியங்கா அது பற்றி பெரியதாக எதையும் கண்டுக் கொள்ளவில்லை.
சீரியலை விட்டு அதிரடியாக விலகுகிறேன்..
இதனை தொடர்ந்து சமிபத்தில் கலந்து கொண்ட பேட்டியில் பேசும் போது ஒரு கவலையான விடயத்தை பகிர்ந்துள்ளார்.
அதில், தற்போது நடித்து கொண்டிருக்கும் “ சீதாராமன் ” சீரியலில் இருந்து விலகபோவதாக கூறியுள்ளார். மேலும் “என்னுடைய கணவர் நன்றாக பணம் சம்பாரித்து வைத்திருக்கிறார்.
இதனால் நீ நடிக்க வேண்டிய அவசியம் இல்லை என என்னுடைய கணவர் கூறிவிட்டார். என்னால் கணவர் சொல்லை தட்ட முடியவில்லை. இதன் காரணமாக தான் விலக விரும்புகிறேன்” என கூறியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், “ அப்போ இனி இந்த சீரியலில் யார் நடிப்பார் ” என கேள்வி மேல் கேள்வியெழுப்பி வருகிறார்கள்.