ரோஜா சீரியல் ஹூரோவுக்கு திருமணம் ஆகிவிட்டதா? வெளியே கசிந்த மனைவியின் புகைப்படம்!
ரோஜா சீரியல் நாயகன் சிப்பு சூர்யன் திருமணம் செய்துகொண்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ரோஜா சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. டிஆர்பி ரேட்டிங்கிலும் இந்த சீரியல் முன்னிலையில் இருந்து வருகிறது.
இந்த சீரியலில் முன்னனி கதாப்பாத்திரங்களான அர்ஜூன் கேரக்டரில் சிப்பு சூர்யனும், ரோஜா கேரக்டரில் பிரியங்காவும் நடித்து வருகின்றனர். ரோஜா சீரியல், 900 எபிஷோடுகளை கடந்து ஒளிப்பரப்பாகி வருகிறது.
இந்நிலையில், ரோஜா சீரியலின் ஹீரோவான சிப்பு சூர்யன் திடீரென திருமணம் செய்துக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை அவரது ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
சிப்பு சூர்யன் தனது குடும்பத்தினர் புகைப்படங்களை இதுவரை சமூக வலைதளங்கில் வெளியிட்டதில்லை. அவருடைய புகைப்படங்களை மட்டுமே ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தார்.
இதையடுத்து, தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த, சிப்பு சூர்யன் தனக்கு திருமணம் ஆகிவிட்டதாக கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். இதனால், ரசிகர்கள் அவரது மனைவி புகைப்படத்தை தேடி கண்டுபிடித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.