இந்த பழக்கங்களை மாத்திக்கோங்க... இல்லனா இளம் வயதில் மாரடைப்பு உறுதி!
பொதுவாக மாரடைப்பானது இதய தசையின் ஒரு பகுதிக்கு இரத்த ஓட்டம் தடைபடும் போது ஏற்படுகிறது, இதனால் இதயத்தின் அந்த பகுதியில் சேதம் அல்லது இறப்பு ஏற்படுகிறது.
இந்த அடைப்பு பொதுவாக இதயத்திற்கு இரத்தத்தை வழங்கும் கரோனரி தமனிகளில் கொழுப்பு படிவுகள் (பிளேக்) குவிவதால் ஏற்படுகிறது.
இது தற்காலத்தில் வயதுவித்தியாசம் இன்றி அனைவரையும் தாக்கும் நிலை காணப்படுகின்றது. உலகளாவிய ரீதியில் மாரடைப்பால் ஏற்படும் மரணங்களை கட்டுப்படுத்த மிக முக்கியமாக சில வாழ்க்கை முறை பழக்கங்களில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும்.
அந்த வகையில் குறிப்பாக இளைஞர்களை குறிவைக்கும் மாரடைப்பை தடுக்க கடைப்பிடிக்க வேண்டிய வாழ்கை முறை பழக்கங்கள் என்னென்ன என்பது தொடர்பில் விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜங்க் ஃபுட் - பர்கர், பிஸ்ஸா, போன்ற டிரான்ஸ் ஃபேட் நிறைந்த துரித உணவுகளை உண்ணும் பழக்கம் இளைஞர்கள் மத்தியில் தவிர்கமுடியாததாக மாறிவிட்டது. ஆனால் மாரடைப்பை தடுக்க இந்த பழக்கத்தை கைவிட்டு காய்கறிகளையும் பழங்களையும் அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சி - குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் மொபைல்/டேப்லெட் பயன்பாட்டை குறைத்து , ஒரு நாளைக்கு குறைந்தது 1 மணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். அல்லது விளையாட/ஓட/ஜிம்னாஸ்டிக்ஸ் செய்ய பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.
புகைத்தல் மற்றும் மது - புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்றவற்றால் இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கின்றது. அதனை தவிர்த்து ஆரோக்கியமான உணவுப்பழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும்.
மன அழுத்தம் - இளவயது மாரடைப்புக்கு ஒரு முக்கிய காரணமாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
பெற்றோர்கள் தங்களின் குழந்கைகளுடன் நண்பர்கள் போல் நெருங்கி பழகுவதாலும் வெற்றி தோல்விகளை சமமாக எடுத்துக்கொள்ள சிறுவயதில் இருந்தே கற்றுக்கொடுப்பதும் முக்கியம்.
இளைஞர்கள் யோகா கலை மற்றும் தியானம் போன்றவற்றில் கவனம் செலுத்துவது மனஅழுத்தை குறைத்து மாரடைப்பு அபாயத்தை கட்டுப்படுத்துகின்றது.
போதுமான தூக்கம் மற்றும் தண்ணீர் - தினசரி குறைந்தது 8 மணிநேர தூக்கம் 8 கிளாஸ் தண்ணீர் ஆரோக்கியமான இதயத்துக்கு இன்றியமையாதது. இந்த பழக்கங்களை முறையாக பின்பற்றினால் இளவயது மாரடைப்பு அபாயத்தை வலுவாக குறைக்க முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |