கூந்தல் காடு மாதிரி வளரணுமா? வாரம் இருமுறை கறிவேப்பிலை சட்னியை இப்படி செய்து சாப்பிடுங்க
கறிவேப்பிலையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் என பல்வேறு ஊட்டச்சத்துக்களும் மருத்துவ குணங்களும் நிறைந்து காணப்படுகின்றது.
தினசரி உணவில் கறிவேப்பிவையை சேர்த்துக்கொள்வதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் செரிமான ஆற்றலும் அதிகரிக்கின்றது.
மேலும் கறிவேப்பிலை முடி மற்றும் தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் பெரிதும் துணைப்புரிகின்றது.
கூந்தல் அடர்த்தியாகவும் கருமையாகவும் வளர வேண்டும் என்ற ஆசை இருப்பவர்கள் வாரம் இரண்டு முறை கறிவேப்பிலையில் சட்னி செய்து சாப்பிட்டாலே போதும் கூந்தல் கட்டுக்கடங்காமல் வளர ஆரம்பித்துவிடும்.
ஆரோக்கிய நன்மைகளை அள்ளிக்கொடுக்கும் கறிவேப்பிலையில் எவ்வாறு எளிமையான முறையில் அசத்தல் சுவையில் சட்னி செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கறிவேப்பிலை - 1 கப்
எண்ணெய் - 1 தே.கரண்டி
கடலைப்பருப்பு - 1 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தே.கரண்டி
வர மிளகாய் - 5
பெருங்காயத்தூள் - 1/2 தே.கரண்டி
புளி - சிறிய துண்டு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய் - 1 தே.கரண்டி
கடுகு - 1/2 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் கடலைப்பருப்பை சேர்த்து பொன்நிறமாக வறுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து உளுத்தம் பருப்பு சேர்த்து லேசாக வறுத்து, அதனுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து சில நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வறுக்த்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் நன்கு கழுவி உலரவைத்த கறிவேப்பிலையையும் சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் அதனுடன் பெருங்காயத்தூள் சேர்த்து கலந்துவிட்டு, சிறிய துண்டு புளி கலந்து அடுப்பை அணைத்து நன்றாக ஆறவிட வேண்டும்.
பின்னர் அந்த கலவையில் சிறிதளவு உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இறுதியாக ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து துவையலுடன் சேர்த்தால் அவ்வளவு தான் நாவூரும் சுவையில் கசப்பு தன்மை கொஞ்சமும் இல்லாத கறிவேப்பிலை சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |