obstructive sleep apnea: தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறல்... இதற்கு என்ன தீர்வு?
பொதுவாகவே தற்காலத்தில் உடல் பருமனால் அவதிப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
துரித உணவுகளின் அதிகரித்த நுகர்வு, அதிகரித்த வேலை பளு, மன அழுத்தம் மற்றும் போதிய உடற்பயிற்சி இல்லாமை போன்ற காரணங்களினால் உடல் பருமன் பிரச்சினை ஏற்படுகின்றது.

உடல் பருமனுடன் தொடர்புடைய மிகவும் பொதுவான பிரச்னைகளில் ஒன்று தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறல் (obstructive sleep apnea) ஆகும்.
மூச்சுத்திணறல்
தூக்கத்தின்போது குறுக்கிடப்பட்ட சுவாசத்தால் வகைப்படுத்தப்படும் தூக்கக் கோளாறு நோயாக தூக்கத்தில் மூச்சுத்திணறல் மற்றும் குறட்டை பிரச்சினைகள் குறிப்பிடப்டுகின்றது.

மூச்சுத்திணறல் உள்ளவர்கள் தூங்கும்போது மீண்டும் மீண்டும் சுவாசத்தை நிறுத்தி சுவாசிக்கத் தொடங்குவார்கள்.
தூக்கத்தில் மூச்சுத்திணறல் பல வகைகள் உள்ளன. தொண்டைத் தசைகள் தளர்ந்து, சுவாசப் பாதையைத் தடுக்கும் போது, தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.

இது உறக்கத்தின் போது பல முறை நிகழ்கிறது. தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படுவதற்கான முக்கிய அறிகுறியாக குறட்டை பார்க்கப்படுகின்றது.
ஆனால் குறட்டை விடுகிற அனைவருக்கும் தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படும் என்று அர்த்தம் கிடையாது.
தூங்கும் போது சராசரியாக10 நொடிகள் வரையிலும் இதுபோன்ற பிரச்சினை நீடிக்கும். பெரும்பாலும் 10-30 நொடிகளில் மூச்சு திரும்பிவிடும். ஆனால், சிலருக்கு ஒரு நிமிடம் அல்லது அதற்கு கூடுதலான நேரம் கூட மூச்சுத்திணறல் ஏற்படுகின்றது.

தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறல் பிரச்சினையால், சுமார் 40 சதவீதம் வரையிலும் ஆக்ஸிஜன் விநியோகம் தடைபடுகிறது. சிலருக்கு இதைவிட கூடுதலாகவும் ஆக்ஸிஜன் தடைபடுகிறது.
ரத்தத்தில் ஆக்ஸிஜன் விநியோகம் குறைகிறது என்பதை தூக்கத்தின் போதும் மூளை எச்சரிக்கை செய்யும். அந்த சமயத்தில் தூக்கத்தில் இருந்து தூக்கி வாரிப்போட்டதை போல் விழிப்பு நிலை ஏற்படும்.

நாம் ஒரு கனம் மூச்சு விட்டு ஆசுவாசப்படுத்திக் கொள்வோம். ஓர் இரவில் 100இல் ஒரு பங்கு இவ்வாறு நடக்க அதிக வாய்ப்பு காணப்டுவதாக மருத்துவ நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
மூச்சுத்திணறலின் அறிகுறிகள்
அதிக பகல் தூக்கம்
உரத்த குறட்டை
தூக்கத்தின் போது சுவாசம் நிறுத்தப்பட்டது போன்று உணர்தல்
இரவில் கண்விழித்தல்
உலர்ந்த வாய்
தொண்டை வலியுடன் காலையில் எழுந்திருத்தல்
காலை தலைவலி
பகலில் கவனம் செலுத்துவதில் சிக்கல்

சிகிச்சை
உடல் எடையை கட்டுக்கள் வைத்துக்கொள்ள வேண்டும்.
வாழ்வியல் மாற்றங்களில் கவனம் செலுத்த வேண்டும் குறிப்பான சரியான உணவுமுறை மற்றும் உடற் பயிற்சி ஆகியவற்றில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.
அதன் மூலமாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணலாம். சிலருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையும் ஏற்படாலாம்.

மிகவும் கடுமையான குறட்டை, தூக்கத்தில் இருந்து திடீரென்று எழுவது, தூங்கும்போது விட்டுவிட்டு சுவாசிப்பது, பகல் நேரத்தில் சோம்பல் மற்றும் கவனச் சிதறல் ஆகிய அறிகுறிகளை உணர்ந்தால், அவற்றை அலட்சியம் செய்யாது உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டியது இன்றியமையாதது.
 
    
    Alzheimer's disease symptoms: அல்சைமர் நோய் அறிகுறிகள் எப்படி இருக்கும்? முழுமையான மருத்துவ விளக்கம்
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        