வயிற்றில் குழந்தையுடன் Fashion show-ல் பாலிவுட் நடிகை- இணையத்தில் வைரலாகும் படங்கள்
வயிற்றில் குழந்தையுடன் Fashion show-ல் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
கியாரா அத்வானி
201இல் “எம்.எஸ்.தோனி: தி அண்டோல்ட் ஸ்டோரி” என்ற திரைப்படத்தின் மூலம் ஹிந்தி நடிகையானவர் தான் நடிகை கியாரா அத்வானி.
இவர், அர்ஜூன் ரெட்டி ஹிந்தி ரீமிக்கிலும் நடித்து புகழ் பெற்றார்.
சமீபத்தில் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் வெளியான Game changer திரைப்படத்தில் நடித்துள்ளார்.
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருக்கும் கியாரா கடந்த 2023இல் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
வயிற்றில் குழந்தையுடன் இருக்கும் படங்கள்
திருமணமாகி இரண்டு வருடங்கள் கடந்த நிலையில், நடிகை கியாரா அத்வானி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.
குழந்தைகளின் காலணிகளை பதிவிட்டு கியாரா, “எங்களது வாழ்க்கையின் சிறந்த பரிசு. விரைவில் வரவிருக்கிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து கடந்த இரண்டு தினங்களுக்கு பிரமாண்டமாக நடந்து முடிந்த திரைப்பட விழாவிற்கு வயிற்றில் குழந்தையுடன் கருப்பு நிற ஆடையில் வருகை தந்துள்ளார்.
இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |






