கொந்தளித்த ரசிகர்கள்... பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட பிரபுதேவா
சென்னையில் பிரபுதேவா கலந்து கொள்ள இருந்த நிழக்ச்சிக்கு திடீரென கலந்துகொள்ளாததால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
பிரபுதேவா
நடன இயக்குநரும், நடிகருமான பிரபு தேவா நடிப்பிலும், நடனத்திலும் கலக்கி வருகின்றார். இந்நிலையில் அவரின் பங்களிப்பை பெருமைபடுத்தும் விதமாக சர்வதேச நடன தினத்தை உலக சாதனையாக்க திட்டமிட்டிருந்தனர்.
சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் பிரபுதேவாவின் பாடல் 100 எடுத்து அதனை 100 நிமிடம் ஒலிக்கவிட்டு நடமாடும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்காக சிறியவர்கள், பெரியவர்கள் என 5000 ஆயிரம் பேர் கலந்துகொண்டதுடன், சிறப்பு விருந்தினராக பிரபு தேவா கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்வை நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டர் தனது குழுவினருடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் பிரபுதேவா உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கலந்துகொள்ளவில்லை.
இதனால், காலை 6 மணியிலிருந்து 9 மணி வரை வெயிலில் காத்திருந்த சிறுவர்களும், அவர்களது பெற்றோர்களும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள பிரபுதேவா, “எல்லோருக்கும் என்னுடைய சல்யூட். இவ்வளவு சிரத்தை எடுத்து நேரம் ஒதுக்கி நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளீர்கள். உங்கள் அன்புக்கு நன்றி. என்னால் நிகழ்வுக்கு வர முடியவில்லை என்பது வருத்தமாக உள்ளது. அங்கே நடனமாடியவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
அவர்களை சந்திக்க முயற்சி செய்கிறேன். இறுதிப்பாடல் வரை லைவ்வில் பார்த்துக்கொண்டு தான் இருந்தேன். இந்த வாய்ப்பை தவறவிட்டுவிட்டேன். எல்லோருக்கும் நன்றி” என தெரிவித்திருந்தார்.
முன்னதாக நிகழ்விடத்தில் லைவ்வில் பேசிய அவர் பங்கேற்பாளர்களிடம் வருத்தம் தெரிவித்திருந்தார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |