இளம் இசையமைப்பாளர் திடீர் மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம்
இளம் இசையமைப்பாளர் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இசையமைப்பாளர் பிரவீன் குமார்
தமிழ் திரையுலகில் இளம் இசையமைப்பாளர் பிரவீன் குமார். இவர் ’மேதகு’ ‘ராக்கதன்’ போன்ற படங்களுக்கு இசையமைத்ததுடன், குறும்படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
மேலும் வேறு சில படங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாகவும் கூறப்படும் நிலையில், இவர் உடல்நலக் குறைவினால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை 6 30 மணிக்கு அவர் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இளம் இசையமைப்பாளர் பிரவீன் குமார் மறைவு செய்தியை அறிந்த திரையுலகினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இவரது இறுதி ஊர்வலம் சொந்த ஊரான தஞ்சையில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |