சப்பாத்திக்கு அருமையான மீல் மேக்கர் கோலா உருண்டை கிரேவி! மட்டன் கிரேவி நிச்சயம் தோற்றுவிடும்
மீல் மேக்கரை வைத்து சப்பாத்திக்கு அருமையான கிரேவி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஆம் சிக்கன் மற்றும் மட்டன் கிரேவியை மிஞ்சும் அளவிற்கு மீல் மேக்கர் கோலா உருண்டை செய்து அசத்தலாம்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு
பொட்டுக்கடலை - 1/4 கப்
சோம்பு - 1 டீஸ்பூன்
கோலா உருண்டை செய்வதற்கு
சுடுநீர் - தேவையான அளவு
மீல் மேக்கர் - 1 கப்
எலுமிச்சை சாறு- சிறிது
உப்பு - சிறிது
மிளகாய் தூள் - 1/2
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
உப்பு - சிறிது
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.
கிரேவிக்கு
பட்டை - 3
கிராம்பு - 3
சோம்பு - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 2 (அரைத்தது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
தக்காளி - 2 (அரைத்தது)
மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - தேவையான அளவு
கசூரி மெத்தி - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை
மிக்ஸி ஜார் ஒன்றில் பொட்டுக்கடலை மற்றும் சோம்பு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து கொள்ளவும்
சுடுநீரில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து மீல் மேக்கரை போட்டு 5 நிமிடம் மூடி ஊற வைக்கவும்.
5 நிமிடம் கழித்து, ஊற வைத்த மீல் மேக்கரை குளிர்ந்த நீரில் 2 முறை அலசி அதிலுள்ள நீரை பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
பின்பு மிக்ஸி ஜாரில் மீல் மேக்கரை சேர்த்து நன்கு அரைத்து, அதனை கின்னம் ஒன்றில் மாற்றிக்கொண்டு, அத்துடன் மிளகாய்தூள், கரம் மசாலா, சிறிது உப்பு கொத்தமல்லி சேர்த்து நன்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும்.
பின்பு வாணலியினை அடுப்பில் வைத்து 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், உருட்டி வைத்துள்ள உருண்டைகளை அதில் சேர்த்து பொன்னிறமாக பொரித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பின்பு அதே வாணலியில் உள்ள எண்ணெய்யுடன் பட்டை, கிராம்பு, சோம்பு சேர்த்து தாளித்து, அதில் வெங்காயத்தையும் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பின்பு இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, அதனுடன் தக்காளியை சேர்த்து நீர் வற்றும் வரை நன்கு வதக்கவும்.
பின்பு மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, சேர்த்து 2 நிமிடம் கிளறி, கிரேவிக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
கடைசியாக பொரித்து வைத்துள்ள கோலா உருண்டைகளை குறித்த கிரேவியில் சேர்த்து கசூரி மெத்தி சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து, மல்லித்தழை தூவி இறக்கினால் அட்டகாசமான கோலா உருண்டை தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |