மதுபான விரும்பியா நீங்க? இந்த 3 அறிகுறி வந்தா கவனம்... கல்லீரல் பாதிப்பு
அதிகமாக மதுபானம் குடிப்பவர்கள் குறிப்பிட்ட அறிகுறிகள் தெரிந்தால் மருத்துவரை அணுக வேண்டும். காரணம் கல்லீரல் பாதிக்கபட்டிருக்கலாம்.
கல்லீரல்
மது நமது உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் ஒரு பொருள். அது நாம் வாங்கி குடிக்கும் போத்தலிலே போடப்பட்டிருக்கும். இதனால் உடலில் பல பாகங்கள் பாதிப்புகுள்ளாகும்.
மது அதிகமாக குடிக்கும் போது அது நம் உடலில் உள்ள கல்லீரலில் காயத்தை ஏற்படுத்தி கல்லீரல் செயலிழப்பிற்கு வழி வகுக்கும். நீங்கள் கொஞசமாக மது அருந்தல் கூட அது கல்லீரலில் பிரச்சனையை கொண்டு வந்து சேர்க்கும்.
எனவே நீங்கள் ஒரு மது குடிப்பவராக இருந்தால் உடலில் இந்த மூன்று அறிகுறிகளை கவனித்து கொள்ள வேண்டும். அப்படி மூன்று அறிகுறிகள் தெரிந்தால் உங்கள் கல்லீரலில் பாதிப்பு உண்டாகி உள்ளது எனப்படுகின்றது.

அறிகுறிகள்
நீங்கள் இரவில் மது குடிக்கறீர்கள் காலையில் எழுந்தவுடன் உங்களுக்கு ஏதோ தலை கனமாக இருப்பது போல உணர்வு வந்தால் அந்த அறிகுறி உங்கள் கல்லீரல் பாதிப்பின் முதல் அறிகுறி எனப்படுகின்றது.
இத தவிர உடலில் சக்தி குறைவு, சாப்பிட ஆசை இல்லாமை, குமட்டல் மற்றும் வாந்தி போன்ற உணர்வுடன் இருப்பது உடலில் வலி மற்றும் பலவீனம் இருப்பது நல்லதல்ல. இதுபொன்ற அறிகுறி தென்பட்டால் நீங்கள் உடனே மருத்துவரை அணுகி பரிசோதிப்பது அவசியம்.

மது அருந்தி ஒரு நாள் முடிந்தாலும் மது அருந்தியவர்களுக்கு வாந்தி குமட்டல் வயிற்று கனத்தன்மை வாயு ஊதோ மந்தமான உணர்வு அதிகப்படியான ஏப்பம் போன்றவை இருந்தால் அதற்கான காரணம் நமது குடல் புணரி அதிகளவில் மோசமடைந்து விட்டது என்பது தான். இதுபோன்ற அறிகுறி வந்தால் மது அருந்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

இரவில் நீங்கள் தூங்கும் போது அடிக்கடி விழிப்பு வந்தால் ஆழ்ந்த தூக்கம் கிடைக்கவில்லை என்றால் ஜாக்கிரதை. இது கல்லீரலுக்கான பாதிப்பு. அதிலும் எப்போதும் சோம்பலாகவும் குடிக்காமல் தூக்கம் வரவில்லை என்பதும் இதற்கான காரணங்கள் எனப்படுகின்றது.
மரு அருந்தும் நபர்களுக்கு இதுபோன்ற அறிகுறிகள் தெரிந்தால் நீங்கள் உடனடியாக மது குடிப்பதை நிறுத்த வேண்டும். அல்லது மருத்துவரை நாடி ஆலோசனை பெற வேண்டும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |