இலங்கையிலிருந்து வர காசு கூட இல்ல: பிரபல சீரியலில் களமிறங்கிய இலங்கை பெண்
தற்போது இலங்கையைச் சேர்ந்த பலரும் பல திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடித்து பிரபல்யமாகி வருகின்றனர் அந்த வகையில் பிரபல சீரியலில் இலங்கைப் பெண் ஒருவர் கலக்கி வருகிறார்.
பொன்னி சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் சமீபத்தில் பொன்னி சீரியல் ஆரம்பாகி சென்றுக்கொண்டிருக்கிறது. இது ஒரு குடும்ப நாடகமாக வார நாட்களில் ஒளிபரப்பாகும்.
இந்த சீரியலில் நடிகர் சபரி கதாநாயகனாக நடிக்கிறார் இவர் வேலைக்காரன் சீரியல் மூலம் பிரபலமானவர். கதாநாயகியாக ராஜா ராணி2 மூலம் பிரபலமான நடிகை வைஷு சுந்தர் இந்த சீரியலில் கதாநாயகியாக நடிக்கிறார்.
இந்த சீரியலில் ஸ்ரீதேவி, ஷியாரா ஷர்மி, ஷமிதா கெத்தாடா, கண்ணன், ஜனனி பிரபு, யுவன் ராஜ் நேத்ருன், வருண் உதய், கார்த்திக் சசிதரன் என பல நடிகர்கள் நடிக்கின்றனர்.
சீரியலின் கதை வித்தியாசமாக இருப்பதால் பார்வையாளர்களை அதிகம் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொன்னி சீரியலில் இலங்கைப் பெண்
பொன்னி சீரியலில் இலங்கைச் சேர்ந்த பெண்ணொருவர் நடித்து வருகிறார். அது யாரென்று தோன்றிப் பார்க்கையில் தான் அட இவரா? பார்க்க அப்படித் தெரியவே இல்லையே என்பது போல இருக்கிறது.
பொன்னி சீரியலில் வெண்ணிலா என்றக் கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சியாரா சர்மி. இவரின் பிறப்பிடம் இலங்கை தான்.
இலங்கையில் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் தற்போது சீரியலுக்குள் நுழைந்திருக்கிறார். இவர் இலங்கைப் பற்றியும், பொன்னி சீரியல் பற்றியும் நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார்.
அந்த நேர்காணல் வீடியோ இதோ,