முதல் பாடலால் எழுந்த சர்ச்சை: விஜய் மீது பொலிஸில் பரபரப்பு புகார்
நடிகர் விஜய் பாடிய நான் ரெடி பாடலால் பொலிஸில் நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
லியோ திரைப்படம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் தான் லியோ.
இத்திரைப்படத்தில் திரிஷா சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர், பிக்பாஸ் ஜனனி, பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ் என ஒரு பெரிய பட்டாளமே நடித்து வருகின்றனர்.
மேலும், இத்திரைப்படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறார். ஒரு பெரிய கூட்டணியில் இத்திரைப்படம் உருவாகுவதால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்துக் கொண்டிருக்கிறது.
இத்திரைப்படத்தில் இருந்து நடிகர் விஜய்யின் பிறந்த நாள் ஸ்பெஷலாக விஜய் பாடிய நா ரெடி பாடல் வெளியாகியிருந்தது.
பாடலால் புகார்
இந்நிலையில் இந்தப் பாடல் பட்டித் தொட்டி எங்கும் ஒலித்துக் கொண்டிருந்த வேளையில், இந்தப் பாடலுக்கு எதிராகவும் விஜய்யிற்கு எதிராகவும் பொலிஸ் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
நான் வரவா தனியா என்று தொடங்கும் இந்த பாடல் போதை பொருள் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருப்பதாகவும் இந்த பாடலை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் சென்னை காவல் ஆணையர் அலுலவகத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்தப் புகார் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், இது குறித்து லியோ படக்குழுவினர் என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் என்பது பற்றி இன்னும் தெரிவி்க்கவில்லை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |