அஜித் பாடலைக் காப்பி அடித்த அனிருத்: இணையவாசிகளிடம் சிக்கித் தவிக்கும் லியோ பாடல்
விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் லியோ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் அஜித் பட பாடல் காப்பி என வீடியோவோடு வெளியிட்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.
லியோ திரைப்படம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் தான் லியோ.
இத்திரைப்படத்தில் திரிஷா சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர், பிக்பாஸ் ஜனனி, பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ் என ஒரு பெரிய பட்டாளமே நடித்து வருகின்றனர். மேலும், இத்திரைப்படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறார்.
ஒரு பெரிய கூட்டணியில் இத்திரைப்படம் உருவாகுவதால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் நேற்று நடிகர் விஜய்யின் பிறந்த நாள் ஸ்பெஷலாக லியோ திரைப்படத்தில் இருந்து விஜய் பாடிய நா ரெடி பாடல் வெளியாகியிருந்தது. இந்தப் பாடலுக்காக காத்திருந்த ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர்.
காப்பி அடிக்கப்பட்ட பாடல்
என்ன பிடித்த நடிகர், பிடித்த பாடல் என்றாலும் கூட அதற்குள் ஒரு குறையை எப்படியாவது தோண்டிப்பார்த்து தான் இணையவாசிகள் அதிக ஆர்வம்.
அப்படி நேற்று வெளியான இந்தப் பாடலில் அனிருத் காபி அடிக்கப்பட்டதாக இணையவாசிகள் கண்டுப்பிடித்துள்ளனர். விஜய்யின் நா ரெடி பாடல் அஜித் நடித்த திருப்பதி படத்தில் இடம்பெற்ற திருப்பதி வந்த திருப்பம் என்றப் பாடல் தான் காப்பி அடிக்கப்பட்டதாக தெரிவித்திருக்கிறார்கள்.
ஐயா, இது நம்ப தல பாட்டு copy மாறி இருக்கு.....
— AK_VidaaMuyarchi (@AK_VM001) June 20, 2023
எனக்கு மட்டும் தான் இப்படி தோனுதா? இல்ல உங்களுக்கும் அப்படி தான் தோனுதா nu comment பண்ணுங்க மக்களே.....#VidaMuyarchi #Thunivu #AjithKumar#NaaReady#NaaReadyPromo#NaaReadyCopy#Leo pic.twitter.com/kNjYaT2bhK
இந்நிலையில் இந்த இரண்டு பாடல்களையும் வீடியோவாக வெளியிட்டு கலாய்த்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |