டீ-யுடன் பிஸ்கட் சாப்பிடும் பழக்கம் இருக்கிறதா? இது உங்களுக்கான செய்தி தான்
இன்று குழந்தைகள் அதிகமாக விரும்பி சாப்பிடும் உணவு பண்டமாக மாறியுள்ளது பிஸ்கட். பிஸ்கட் சாப்பிடுவதால் நாம் என்னென்ன பிரச்சினையை சந்திக்க நேரிடும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
பிஸ்கட்டின் ஆயுள்காலத்தை நீட்டிக்க சேர்க்கப்படும் ஹைட்ரஜனட்டட் கொழுப்புச்சத்து காலப்போக்கில் டிரான்ஸ் ஃபேட் எனப்படும் மோசமான கொழுப்பாக மாறி, உடல் சார்ந்த பல பாதிப்புகளுக்குத் திறவுகோலாக அமையும்.
சுக்ரோஸ் அதிகமுள்ள சர்க்கரை, பிஸ்கட்ல் அதிகம் கலக்கப்படுகிறது. இதனால் சர்க்கரை நோய், இதயப்பிரச்சனைகள், கொழுப்புச்சத்து அதிகரிப்பது போன்றவை ஏற்படலாம்.
சோடியம் பை கார்பனேட் எனப்படும் உப்பு பிஸ்கட்டில் அதிகளவு உள்ளது. உடலில் சோடியம் அதிகமானால், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகக் கல், இதய பாதிப்புகள் ஏற்படும்.
கெட்ட கொழுப்புச்சத்து உயர்வதால், பிஸ்கட் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கும்.
காலை உணவாக டீ, பாலுடன், ஸ்நாக்ஸாக பிஸ்கட்டை எடுத்துக்கொள்வது ஆரோக்கியமான விஷயமல்ல. சிறுவயதிலேயே பிஸ்கட் சாப்பிடப் பழகுவதால் செரிமானக் கோளாறுகள், குடல் பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
க்ரீம் பிஸ்கட்டை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஆரஞ்சு ஃப்ளேவர், சாக்லேட் ஃப்ளேவர் எனப் பலவகை பிஸ்கட்டுகள் கடைகளில் கிடைக்கின்றன. இவை யாவும் செயற்கை நிறமிகள்.
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, பிரேக்கில் சாப்பிட பிஸ்கட் கொடுத்தனுப்பினால் மதிய உணவை முழுமையாகச் சாப்பிட முடியாமல் போகும். சாப்பிட பழங்களைக் கொடுத்தனுப்பினால் அது பசியைத் தூண்டுவதுடன் கூடுதல் சத்துக்களையும் கொடுக்கும்.