வீட்டிலிருந்து மட்டும் வேலை பார்க்காதீங்க... இந்த பாதிப்பை சந்திப்பீங்க
வீட்டிலிருந்து வேலை செய்யும் நபர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
வீட்டிலிருந்து வேலை
கொரோனாவிற்கு பின்பு இன்று பெரும்பாலான நபர்கள் வீட்டில் இருந்து தான் தனது அலுவலக வேலையை செய்து வருகின்றனர்.
பெரும்பாலான நிறுவனங்களும் ஊழியர்கள் வீட்டில் வைத்து வேலை செய்வதற்கு சம்மதம் அளித்தும் வந்தது. ஆனால் தற்போது சில நிறுவனங்கள் ஊழியர்களை அலுவலகத்தில் வந்து வேலை பார்க்கவும் கூறியுள்ளனர்.
ஆனால் அலுவலகத்தில் இருந்து வேலை செய்வது நல்லதா? வீட்டிலிருந்து வேலை செய்வதால் என்ன பிரச்சனை? என்று தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
என்னென்ன பிரச்சனை ஏற்படும்?
வீட்டில் இருந்து வேலை செய்வதால் உடல் செயலற்ற தன்மை அதிகரிப்பதுடன், உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு நோய், இதய நோய் பிரச்சனை ஏற்படுகின்றது.
வீட்டு வேலைகள், குழந்தைகளின் பள்ளி வேலைகள் போன்ற பொறுப்புகளால் வேலை அழுத்தத்துடன் மன அழுத்தமும் அதிகரிக்கின்றது.
அலுவலகத்திற்கு செல்லாமல் இருப்பதால் சக ஊழியர்களுடனான தொடர்பு குறைவதுடன், தனிப்பட்ட வாழ்க்கையை பிரிப்பதில் சிரமம், பதற்றம், மனச்சோர்வு ஏற்படும். வேலையில் அதிகமான இடையூறுகள் ஏற்படுவதுடன், இது வாழ்க்கையிலும் தொடர்வதால் குடும்பத்திலும் பிரச்சனை எழுகின்றது.
வீட்டில் இருந்து வேலை செய்யும் போது அதிகமான தடைகள் ஏற்படும். குடும்ப உறுப்பினர், அக்கம் பக்கத்தினரின் தொந்தரவு, இணைப்பில் பிரச்சனை, சாப்ட்வேர் பிரச்சனைகள் என பல பிரச்சனைகளை சந்திப்பதுடன், சக ஊழியர்களிடையே தொடர்பு இல்லாததால் உற்பத்தியும் பாதிக்கப்படும்.