புத்தாண்டு ஸ்பெஷல்! அன்னாசி பழத்தில் பாயாசம்
நாளை புத்தாண்டு தினம் என்பதால் பலரும் வீட்டில் இனிப்பு வகைகள் செய்து பூஜைக்கு வைத்து படைப்பதை அவதானித்திருப்போம். அந்த வகையில் அன்னாசி பழத்தில் கேசரி எவ்வாறு தயாரிப்பது என்பதை தெரிந்துகொள்ளலாம்.
தேவையான பொருள்கள்:
அன்னாசிப்பழத் துண்டுகள்- 1 கப்
காய்ச்சிய பால் - 1 லிட்டர்
கன்டெண்ஸ்டு மில்க் - 1 கப்
ஜவ்வரிசி - 1/2 கப்
வெனிலா எசென்ஸ் - 1 ஸ்பூன்
நெய், முந்திரி, கிஸ்மிஸ் -தேவையான அளவு
செய்முறை
முதலில் அன்னாசி பழத்தின் தோல்களை நன்றாக வெட்டி வைத்துக்கொள்ளவும். பின்பு ஜவ்வரிசியை அலசி வைத்துக் கொண்டு, அடுப்பில் ஒரு சிறிய பாத்திரத்தினை எடுத்து பாலை ஊற்றி நன்றாக காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.
மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். 5 நிமிடங்கள் கொதித்ததும், பின்பு ஜவ்வரிசியை மூன்று நிமிடங்கள் சேர்த்து வேக வைக்கவும்.
கன்டெண்ஸ்டு மில்க் சேர்ப்பதால் அதில் இருக்கும் சர்க்கரை சுவையே போதுமானது. பாயசம் நன்றாக கெட்டியான பின் அடுப்பினை ஆஃப் செய்து இறக்கிவிட்டு, பின்பு வெட்டி வைத்துள்ள் அன்னாசி மற்றும் ஒரு துளி அன்னாசி எசென்ஸ் சேர்க்கவும்ஃ
அடுப்பில் ஒரு சிறிய பான் வைத்து அதில் சிரித்து நெய் ஊற்றி முந்திரி மற்றும் உளர் திராட்சை சேர்த்து பொரித்து அதனை பாயசத்தில் ஊற்றி அலங்கரித்தால் தித்திப்பான அன்னாசி ஆப்பிள் பாயசம் ரெடி!