மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு இரத்த அழுத்தம் ஏற்படுமா?
பொதுவாக நம்மில் சிலருக்கு உயர் ரத்த அழுத்த பிரச்சினை இருக்கும் இதனை மருத்துவர்கள் “சைலன்ட் கில்லர்” என்று அழைப்பார்கள்.
ஏனெனின் கொலஸ்ட்ரால் நோயை போல் உயர் ரத்த அழுத்தமும் உடலில் பல வகையான ஆபத்துக்களை ஏற்படுத்தும்.
இதனை தொடர்ந்து இந்த நோய் குணமாக்க முடியாத அளவு இதய நோய்களை ஏற்படுத்தும் ஆபாயம் கொண்டது.
அந்த வகையில் உயர் ரத்த அழுத்தம் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் மே 17 அன்று ஹைப்பர்டென்ஷன் தினம் கொண்டாப்படுகின்றது.
மாதவிடாய் நாட்களில் இரத்த அழுத்தம் ஏற்படுமா?
இந்த பிரச்சினை பெண்களின் மாதவிடாயை பாதிக்குமா? என்பது தொடர்பில் தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
பொதுவாக பெண்களை விட ஆண்களை தான் இந்த நோய் அதிகம் பாதிக்கின்றது. மேலும், இதனால் அதிக பிளட் பிரஷர் அல்லது ஹைப்பர் டென்ஷன் ஆகிய நோய்களும் ஏற்படுகின்றது.
பிளட் பிரஷர் 140/90mmHg க்கு மேல் இருக்கும் பட்சத்தில் அதனை ஹைப்பர் டென்ஷன் என்று கூறுவார்கள்.
அறிகுறிகள்
- தலைவலி
- இதயப் படபடப்பு
- மூக்கிலிருந்து ரத்தம் கசிவு
சமிபக்காலமாக பெண்களுக்கு இதய பாதிப்புகள் அதிகம் இணங்காணப்பட்டுள்ளது.
இதன் விளைவாக கொலஸ்ட்ரால், உடல்பருமன், உயர் ரத்த அழுத்தம் ஆகிய நோய்கள் ஏற்படுகின்றன. இதனால் மாதவிடாய் நாட்களில் தாமதம் ஏற்படுகின்றது.
இதனை தொடர்ந்து பெண்களுக்கு பீரியட்ஸ் நாட்களில் பிளட் பிரஷர் அதிகமாக இருக்கும். PMS க்கும் ஹைப்பர் டென்ஷன்வுக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.
இதற்கான தீர்வு
- ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும்.
- அதிக உப்பு, கொழுப்பு, இனிப்பு உள்ள உணவுகள், மது, சிகரெட் ஆகிய பொருட்களை அதிகம் எடுத்து கொள்வதனை தவிர்க்க வேண்டும்.
- எடையை சரியாக பேண வேண்டும்.
- தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும் மற்றும் குறிப்பிட்ட கால இடைவெளியில், பிளட் பிரஷரை கண்காணிக்க .
- தண்ணீர் மற்றும் திரவங்கள் குடிக்க வேண்டும்.
-
தூக்கமும் ஓய்வும் தேவை.