அப்பா முன்பு மாதவிடாய் காலத்தில் படும் அவஸ்தை! கோபிநாத்தையே கண்கலங்க வைத்த சிறுமி
நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வார தலைப்பில் குழந்தைகளை தனியாக வளர்க்கும் அப்பாக்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகள் என்ற தலைப்பில் விவாதங்கள் தொடர்ந்துள்ளது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் சில காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு வார குழந்தைகளை தனியாக வளர்க்கும் அப்பாக்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகள் என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் அம்மாக்கள் தனியாக பிள்ளைகளை வளர்ப்பதற்கு கஷ்டப்படுவதை அதிகமாக காணமுடிகின்றது. ஆனால் சிங்கிள் அப்பாக்களும் குழந்தைகளுக்காக வாழ்ந்து வருகின்றனர் என்பதை வெளியுலகிற்கு கொண்டு வந்துள்ளது நீயா நானா நிகழ்ச்சி.
அதில் பெண் குழந்தைகள் தந்தையுடன் தனியாக வளரும் நிலையினையும், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் நிலையினையும் கண்கலங்கிய படி சிறுமி ஒருவர் கூறியுள்ளார்.
குறித்த சிறுமியின் கண்ணீர் பேச்சைக் கேட்ட அரங்கமே கடும் சோகத்தில் ஆழ்ந்ததுடன், கண்கலங்கவும் வைத்துள்ளது.