மாதவிடாய் நேரத்தில் கடும் அவதிப்படுகிறீர்களா? அற்புதம் செய்யும் ஒற்றை பொருள்
ஆரோக்கியத்தை அதிகரிப்பதுடன், அதிகமான நன்மைகளையும், சத்துக்களையும் கொண்ட பிரண்டை துவையல் எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
பிரண்டை
எண்ணெய் - 1/4 கப்
இஞ்சி - 1/4 கப் நறுக்கியது
கறிவேப்பிலை - 1/2 கப்
உப்பு
காய்ந்த மிளகாய் - 7
புளி - எலுமிச்சை அளவு
வறுத்த எள் - 1 டீஸ்பூன்
செய்முறை
றறுக்கி வைத்திருக்கும் பிரண்டையை வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி 10 நிமிடம் வதக்கிக் கொள்ளவும். பின்பு நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
பின்பு அதனுடன் 1 கப் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, அதனுடன் காய்ந்த மிளகாய் மற்றும் புளியைச் சேர்த்து வதக்கிய பின்பு அடுப்பை அணைத்துக் கொள்ளவும். இதனுடன் வறுத்த எள் சேர்த்துக் கொள்ளவும்.
பின்பு மிக்ஸியில் மாற்றி பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் தண்ணீரை சேர்த்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய், கடுகு போட்டு தாளித்து பின்பு இட்லி, தோசையுடன் சாப்பிடவும்.
பிரண்டையின் மருத்துவ குணங்கள்
பிரண்டையில் அமிரோன், சிட்டோசிரால், அமைரின், விட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் உள்ளது.
பிரண்டையை எடுத்துக் கொண்டால், வயிற்று வலி, ஜீரணக் கோளாறுகள், மாதவிடாய் கோளாறுகள், ஆஸ்துமா, இரத்த மூலம் உள்ளிட்ட சிக்கல்கள் தீரும் எனக் கூறப்படுகிறது.
மேலும் உடல் சுறுசுறுப்பு, ஞாபக சக்தி, மூளை நரம்புகள் உள்ளிட்டவை பலமாவதுடன், அஜீரணம், பசியின்மை, இரைப்பை அலர்ஜி உட்பட பிரச்சினையும் தீர்க்கின்றது.
அதே சமயம் மூலம் மற்றும் குடற்புழு நீக்குவதற்கு பிரண்டை சிறந்த மருந்தாகச் செயல்படுகிறது எனறே கூறலாம்.