இரண்டு மாதங்களில் உடல் எடை குறைய வேண்டுமா? பிரண்டை செய்யும் அற்புதம்
பிரண்டை பல மருத்துவ குணங்களை கொண்டுள்ள நிலையில், கிராம புறங்களில் அதிகமாக காணப்படும்.
குறிப்பாக தோட்டங்களின் வேலிகளில், கருவேல மரங்களின் பக்கவாட்டில் பிரண்டை கொடி படர்ந்து காணப்படும். அதுவே நகரப்புறங்களில் சில கடைகளில் விற்பனைக்கு வைத்துள்ளனர்.
ஆனால் சிலர் வீட்டிலேயே வளர்த்தும் வருகின்றனர். இனி பிரண்டையை எங்கு அவதானித்தாலும், வாங்கி உணவில் சேர்த்துக் கொள்ள பழகிக்கொள்ளுங்கள். பிரண்டையின் அற்புத மருத்துவ பலனைக் காணலாம்.
பிரண்டையின் மருத்துவ குணங்கள்
பிரண்டையை சிறு துண்டுகளாக வெட்டி ரசத்தில் கொதிக்க வைத்து தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால் எலும்பு வலுவடைவதுடன், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, கெட்ட கொழுப்புகளையும் கரைக்கின்றது.
ரத்த ஓட்டதின் வேகத்தை சீராக வைக்கவும், மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அனைத்து உடல் தொந்தரவுகளையும் போக்குகின்றது. மேலும் தேவையில்லாத நீரை வெளியேற்றும் குணமும் கொண்டது.
மூலம் நோய் மற்றும் எலும்பு பிரச்சினை, எலும்பு முறிவு, வீக்கம் உள்ளவர்கள் பிரண்டையை நெய்யில் வதக்கி அறைத்து காலை மாலை சிறு உருண்டையாக எடுத்து ஒரு மண்டலம் சாப்பிட வேண்டும்.
உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் பிரண்டையை அரைத்து பாலில் கலந்து குடித்தால், இரண்டு மாதங்களில் உடல் எடை குறையும்.
ஆஸ்துமா நோயினால் அவதிப்படுகின்றவர்கள் பிரண்டையை கொஞ்சம் மிளகுடன் எடுத்து தவறாமல் எடுத்துக்கொள்ளவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், வயிற்று பொருமல், குடல் புண் நீக்குதல், பசி உணர்வை அதிகரித்தல், போன்ற பிரச்சினையை தடுக்கின்றது.