பெண்ணிற்கு எமனாக மாறிய ஹேர் கிளிப்... பெண்களே உஷாரா இருங்க
விபத்தில் சிக்கிய பெண் ஒருவருக்கு அவர் தலையில் அணிந்திருந்த ஹேர் கிளிப் ஒன்று உயிரை எடுக்கும் அளவிற்கு பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது தற்போது ஒவ்வொருவருக்கும் விழிப்புணர்வாக இருக்கின்றது.
எமனாக மாறிய ஹேர் கிளிப்
பொதுவாக பெண்கள் தனது கூந்தலை சரியாக வைத்துக்கொள்வதற்கு தலையில் ஹேர் கிளிப் போட்டுக் கொள்வது உண்டு. இந்நிலையில் பெண் ஒருவரின் உயிருக்கே இந்த ஹேர் கிளிப் எமனாக வந்துள்ளது.
பெண் வெளியிட்டிருந்த காணொளியில், காரில் தனது வேலை நிமிர்த்தமாக சென்று கொண்டிருந்த போது எதிர்பாராமல் கார் விபத்தில் சிக்கியுள்ளது. இவரது காரில் இருந்த காற்று பைகள் இவரை காப்பாற்றிய நிலையில், அவர் தலையிலிருந்து மட்டும் ரத்தம் அதிகமாக வந்து கொண்டிருந்துள்ளது.
பின்பு மயக்கமடைந்த இவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவரது தலையில் அவர் அணிந்திருந்த ஹேர் கிளிப் தலையில் மிகவும் ஆழமாக உள்ளே சென்றுள்ளது.
தலை இவ்வளவு பிரச்சினையை சந்தித்தாலும் அந்த கிளிப் மட்டும் எந்தவொரு சேதாரமும் இல்லாமல் இருந்துள்ளது. குறித்த பெண் இக்காட்சியை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டதுடன், பெண்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார். குறித்த சம்பவம் 4 மாதங்களுக்கு முன்பு நடந்தாலும், தற்போது பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |
