முன்ஜென்ம வினையை தீர்க்கும் பிரண்டை! பலரும் அறியாத உண்மை
அதிக மருத்துவ குணம் கொண்ட பிரண்டை தாந்திரிக பரிகாரத்தில் செயல்படுவதுடன், முன்ஜென்ம வினையை தீர்க்கவும் செய்கின்றது.
பிரண்டை செடி
பெரும்பாலும் அதிகமானோர் இந்த பிரண்டை செடியை வீட்டில் வளர்ப்பார்கள்.இந்த செடியை வீட்டில் வளர்ப்பதும் வீட்டிற்கு நன்மையே.
கால்சியம் சத்துக்கள் அதிகம் கொண்டுள்ள இவை மூட்டுவலியை மட்டுமில்ல உங்களுடைய முன்ஜெனம வினைகளையும் பொசுக்கக்கூடிய சக்தி இந்த பிரண்டைக்கு உண்டு.
பரிகாரம் செய்வதற்கு முன்பு சுத்தமாக குளித்துவிட்டு, சிறு துண்டு பிரண்டையை வெட்டி எடுத்து, அதனை நன்றாக நசுக்கி கிண்ணத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
நீங்கள் சுவாசிக்கும் போது பிரண்டையின் வாசம் உங்கள் மூச்சில் கலக்க வேண்டும். பின்பு அகல் விளக்கில் தீபம் ஏற்றி, அதன் அருகில் பிரண்டையை வைத்து நீங்கள் கிழக்கு நோக்கு அமர்ந்து கொண்டு, விளக்கை பார்த்து ஓம் நமசிவாய என்ற பஞ்சாஸ்ர மந்திரத்தை கூற வேண்டும்.
சிவ சிவ ! சிவாய நமஹ! என்றும் அல்லது இஷ்ட தெய்வத்தின் மந்திரத்தை கூட கூறலாம். வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த தாந்திரிக பரிகாரத்தை செய்யலாம். முதல் நாள் எந்த மந்திரத்தை கூறுகிறீர்களோ அதே மந்திரத்தை தான் மீண்டும் கூறி வர வேண்டும்.
இவ்வாறு வழிபடுவதால், எந்த திசையில் இருந்து கஷ்டங்கள் கடகடவென வந்தாலும், அதிலிருந்து வெளிவரும் யோசனைகள் நிச்சயம் ஏற்படுவதுடன், வீட்டில் நேர்மறை எண்ணங்களும் அதிகரிக்கும்.
இந்த பரிகாரம் செய்ய தொடங்கிய 2 வாரங்களில் உங்களுடைய மனதிலும், உடம்பிலும் ஏறபடக்கூடிய மாற்றத்தை நீங்கள் நிச்சயம் உணர்வீர்கள் வாழ்க்கையில் நல்லது எல்லாம் ஒவ்வொன்றாக நடக்கத் தொடங்கும்.