தொப்பையை ஆரோக்கியமாக குறைக்கும் பீர்க்கங்காய் நிலக்கடலை சட்னி... எப்படி செய்வது?
பொதுவாகவே அனைவருக்கும் உடல் எடையைக் குறைத்து, உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
ஆனால், என்னதான் முயற்சி செய்தாலும் பலருக்கு தொப்பையை குறைக்க முடியவில்லையே என்ற கவலை இருக்கத்ததான் செய்கின்றது.
அப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமாக முறையில் தொப்பையை குறைக்க பீர்க்கங்காய் நிலக்கடலை வைத்து ருசியான சட்னியை எளிதாக வீட்டில் எப்படி செய்லாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சட்னி அரைக்க தேவையானவை
பீர்க்கங்காய் - 250 கிராம்
பெரிய வெங்காயம் - 1/2
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 4
பூண்டு - 5 பல்
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
நிலக்கடலை - 3 தே.கரண்டி
கடலை பருப்பு - 1தே.கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
வெல்லம் - 1/2 தே.கரண்டி
நல்லெண்ணெய் - 3 தே.கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் - 1 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/4 தே.கரண்டி
கடுகு விதைகள் - 1/4 தே.கரண்டி
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை
முதலில் அடுப்பில் பாத்திரமொன்றை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடான உடன் நிலக்கடலை, கடலை பருப்பு, பூண்டு, பச்சை மிளகாய், புளி மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து குறைந்த தீயில் நன்றாக வறுத்து தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின் அதே பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி, தோல் நீக்கி பொடியாக நறுக்கிய பீர்க்கங்காய், மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் கடாயை மூடி வைத்து 10 நிமிடங்களுக்கு காய்கறிகள் மென்மையாகும் வரை மிதமான தீயில் சமைக்கவும்.பாத்திரத்தை மூடும் பொழுது பீர்க்கங்காயில் உள்ள தண்ணீர் வெளியேறும் எனவே தண்ணீர் சேர்க்க தேவை இல்லை.
பின்னர் அதில் சிறிதளவு வெல்லம் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி அடுப்பை நிறுத்தி சிறிது நேரம் ஆரவிட வேண்டும்.
பின்னர் ஏற்கனவே வறுத்து வைத்துள்ள வேர்க்கடலை கலவையை மிக்ஸி ஜாரில் போட்டு ஓரளவிற்கு கொரகொரவென்ற பதத்தில் அரைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் காய்கறி கலவையையும் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்வை போட்டு தாளித்து கொள்ள வேண்டும்.
பின்னர் இந்த தாளிப்பை அரைத்து வைத்துள்ள சட்னியில் சேர்த்தால் மணமணக்கும் பீர்க்கங்காய் நிலக்கடலை சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |