நாவிற்கு சுவையான வேர்க்கடலை புதினா சட்னி! உள்ளுறுப்புகளில் எட்டி பார்க்கும் புற்று நோய் அலண்டு ஓடும்
பொதுவாக வீடுகளில் காலையுணவாக இட்லி, சப்பாத்தி இது போன்ற உணவுகள் தான் செய்வார்கள்.
இதற்கு தொட்டு கொள்ள அநேகமான வீடுகளில் சட்னி செய்வார்கள்.
அந்த வகையில் காலையுணவிற்கு சூப்பரான வேர்க்கடலை புதினா சட்னி எவ்வாறு செய்வது குறித்த தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
வறுத்த வேர்க்கடலை - 1/4 கப்
தேங்காய் துருவல் - சிறிதளவு
புதினா - 1 கப்
கொத்தமல்லி - 1/2 கப்
பச்சை மிளகாய் - 5
இஞ்சி - சிறிய துண்டு
புளி - நெல்லிக்காய்
அளவு உப்பு - சுவைக்கு
தாளிக்க
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2 உளுந்தம்
பருப்பு - டீஸ்பூன்
தயாரிப்பு முறை
முதலில் புதினா, கொத்தமல்லி ஆகிய இலைகளை நன்றாக சுத்தம் கொள்ளவும்.
பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொத்தமல்லி, புதினாவை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி கொள்ளவும்.
வதக்கிய கலவை சிறிது நேரம் ஆற வைத்து அதில்,வேர்க்கடலை, தேங்காய் துருவல், ப.மிளகாய், இஞ்சி, புளி, உப்பு சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த கலவை தாளித்து இறக்கினால் சுவையான வேர்க்கடலை புதினா சட்னி தயார்!