கடைகளில் இருக்கும் பீனட் பட்டர் இனி வேண்டாம்.. 2 நிமிடங்களில் இனி வீட்டிலேயே செய்யலாம்
பொதுவாக குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவுகளில் பீனட் பட்டரும் ஒன்று.
இதனை கடைகளில் வாங்கினால் எந்தளவு ஆரோக்கியம் இருக்கும் என சரியாக தெரியாது.
மாறாக தேவையான பொருட்களை வாங்கி வீட்டில் செய்து கொடுத்தால் பிள்ளைகளின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.
அந்த வகையில் வீட்டிலுள்ள பொருட்களை வைத்து எவ்வாறு பீனட் பட்டர் செய்யலாம் என தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- வறுத்த வேர்க்கடலை - 2 1/2 கப்
- உப்பு - 1 சிட்டிகை
- தேன் - 2 தேக்கரண்டி
- எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
பீனட் பட்டர் தயாரிப்பு முறை
முதல் பட்டர் செய்ய தேவையான வேர்க்கடலைகளை 1 கப் அளவு எடுத்து மிக்ஸியில் போட்டு பொடியாக இல்லாமல் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
இதனை தொடர்ந்து 2 கப் வறுத்த வேர்க்கடலைகளை எடுத்து நன்றாக அரைத்து கொள்ளவும். அரைக்கும் போது சற்று எண்ணெய் சேர்த்து அரைக்கவும்.
வேர்க்கடலை அரைத்த பின்னர் விழுது போல் இருந்தால் சரியாக இருக்கும். அத்துடன் தேன், உப்பு, சேர்த்து மீண்டும் ஒரு முறை அரைத்து கொள்ளவும்.
இறுதியாக கொரகொரப்பாக வைத்திருக்கும் வேர்க்கடலைகளை விழுதுவில் சேர்த்து மீண்டும் ஒரு முறை அரைத்து கொள்ளவும்.
இந்த ரெசிபியை சரியாக செய்தால் சுவையான பீனட் பட்டர் 5 நிமிடங்களில் செய்யலாம்.