அதிகமான புரதச்சத்துக் கொண்ட வேர்க்கடலை! இதய நோயிலிருந்து நிச்சயம் பாதுகாக்கும்
புரத சத்துக்களை அதிகமாக கொண்ட வேர்க்கடலை இதய நோயிலிருந்து பாதுகாக்கும் என்பது தெரியவந்துள்ளது.
வேர்க்கடலை
இந்தியாவில் அதிகமாக பயிரிடப்படும் பயிர்களில் ஒன்று தான் வேர்கடலை. எண்ணெய் வித்து பயிரான இந்த பயிரில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் மற்றும் புரத சத்துக்கள் உள்ளது என்றும் கூறப்படுகிறது.
வேர்க்கடலையை பச்சையாக வறுத்து அல்லது தண்ணீரில் வேகவைத்தும், சுட்டும் சாப்பிடலாம் என்றும் உப்பு காரம் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
வேகவைத்த வேர்க்கடலை வறுத்த கடலையை விட உடம்புக்கு மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது.
குழந்தைகளுக்கு மிகவும் சத்தான் உணவுப்பண்டமாக இருக்கும் வேர்க்கடலை அதிகமான புரதச்சத்து கொண்டு என்பதை மறந்துவிட வேண்டாம்.
இதில் உள்ள நார்ச்சத்து இதய நோய் மற்றும் சர்க்கரை நோயை குறைக்கும் தன்மையுடையது என்றும் ரத்த அழுத்தத்தையும் குறைக்கும் என்றும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன.