தழும்புகளை போக்க உதவும் பப்பாளி மற்றும் தக்காளி ஃபேஸ் பெக்..
அனைவருக்குமே தான் அழகாக இருக்க வேண்டும் என்பதே மிகப் பெரிய ஆசை. ஆனால், உண்மையில் முகத்தில் ஏற்படும் முகப்பருக்கள் அந்த ஆசையையே நிராசையாக்கி விடும்.
ஒரு கட்டத்துக்கு மேல் முகப்பருக்கள் மறைந்தாலும் அந்த இடத்தில் வரும் கருமை மற்றும் தழும்புகள் என்ப மாறுவது மிகவும் கஷ்டமானது.
image - Lokmat.com
அந்த வகையில் அந்த தழும்புகளை போக்க என்னவெல்லாமோ செய்வோம். இனி பப்பாளி மற்றும் தக்காளியை பயன்படுத்தி எவ்வாறு அந்த கருமை மற்றும் தழும்புகளை இல்லாமல் செய்யலாம் எனப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பப்பாளி - 50 கிராம்
தக்காளி - 50 கிராம்
image - Simplicity
எவ்வாறு செய்வது?
பப்பாளி மற்றும் தக்காளியை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் நறுக்கிக்கொண்ட பழங்களை மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் போல் அரைத்துக் கொண்டால் ஃபேஸ் பெக் தயார்.
எவ்வாறு பயன்படுத்தலாம்?
முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடங்கள் காயவிட வேண்டும்.
காய்ந்ததும் குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவ வேண்டும்.
image - Tikli
கிடைக்கும் பலன்கள்
- பப்பாளியில் உள்ள பக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நமது சருமத்திலுள்ள இறந்த செல்களை நீக்கி, சருமத்தை பொலிவாகவும் இளமையாகவும் வைக்கும்.
- சரும துளைகளில் உள்ள மாசுக்களை வெளியேற்றுகிறது. பருக்கள் உருவாவதை தடுக்கிறது.
- தக்காளியில் உள்ள விட்டமின் பி1, பி3, பி5 என்பவை சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைத்து, மென்மையான சருமத்தை பெற உதவுகிறது.
image - Femina.in