மூக்குக் கண்ணாடி அணிபவரா நீங்கள்!
நம்மில் பலரின் வாழ்க்கையில் கண்ணாடி அணிவது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதினால் கண் பார்வைக் குறைபாடு ஏற்படக் கூடும், படிக்கம் சமயங்களில் கண்களில் பாதிப்பு ஏற்படலாம். மேலும் அதிக நேரம் கணினியில் தொழில் புரிபவர்களுக்கு பார்வைக் குறைபாடு ஏற்படும்.
image - le cerf volent.ch
இவ்வாறு பல காரணங்களினால் மூக்குக் கண்ணாடி அணிய வேண்டிய சூழல் காணப்படுகின்றது. இதில் இருக்கும் இன்னொரு மிகப்பெரும் பிரச்சினை என்னவென்றால், கண்ணாடி போடுவதனால் மூக்கில் ஏற்படும் தழும்புதான்.
அந்த தழும்பை நீக்குவதற்கான சில குறிப்புகளை இங்கே காணலாம்.
image - Arad Branding
ரோஸ் வோட்டர் - கண்ணாடியால் ஏற்பட்ட தழும்புகளின் மீது ரோஸ் வோட்டர் கொண்டு மசாஜ் செய்துவர நல்ல பலனைக் காணலாம்.
image - Garden Works
தக்காளி - தக்காளியைக் கொண்டு தழும்புகளின் மீது மசாஜ் செய்யலாம். ஏனென்றால் இறந்த செல்களை அகற்றும் பண்பு இதில் காணப்படுகின்றது.
image - Healthline
உருளைக்கிழங்கு - உருளைக்கிழங்கை நன்றாக மசித்து, தழும்புகள் உள்ள இடத்தில் பூசி வர தழும்புகள் விரைவில் மறைந்துவிடும்.
image - Times of india
ஒரேஞ்ச் தோல் - ஒரேஞ்ச் பழத்தின் தோலை எடுத்து, காய வைத்து, பொடியாக்கி அரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் பால் சிறிதளவு சேர்த்து பேஸ்ட் போல் கரைத்து தழும்புகள் உள்ள இடத்தின் மீது பூசி வர மாற்றம் ஏற்படும்.
image - NDTV food
கற்றாழை - கற்றாழையின் ஜெல்லை எடுத்து தழும்புகளின் மேல் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்.
image - Feast and Field
எலுமிச்சை சாறு - எலுமிச்சை சாற்றை சிறிதளவு தண்ணீருடன் சேர்த்து கலந்து தழும்புகளின் மீது பூச வேண்டும். இதில் விட்டமின் சி இருப்பதால் சருமத்துக்கு சிறந்தது.
image - Healthline
தேன் - ஒரு கரண்டி பாலுடன் ஒரு கரண்டி தேன் சேர்த்து கலந்து தழும்புகளின் மீது தடவி உலர விட வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவிக் கொள்ளலாம்.
image - SNAP-Ed Connection - USDA
வெள்ளரிக்காய் - வெள்ளரிக்காயை மசித்து பேட்ஸ் போல செய்து, தழும்புகளின் மீது தேய்த்து வந்தால் நல்ல மாற்றம் தெரியும். இது சருமத்தின் தளர்வுகளை தடுக்கும்.