முகப்பரு பிரச்சினையா? இனி கவலைய விடுங்க
எல்லோருக்குமே தான் அழகாக இருக்கவேண்டும் என்பதே மிகப் பெரிய ஆசை.
மற்றவர்கள் தன்னை பார்க்கும்பொழுது வசீகரமாக இருக்கவேண்டும். மற்றவர்களை பொறாமைப்படுத்தும் அளவுக்கு தமது முகம் இருக்க வேண்டும் இவையே பெரும்பாலானோரின் ஆசை.
image - The Center For Dermotology
ஆனால், இவையனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறது, முகத்தில் வரும் பருக்கள். பருக்கள் ஒருவரின் முக அழகை கெடுக்கின்றது என்பது முற்றிலும் உண்மை.
இந்த முகப்பரு வருவதற்கு பல காரணங்கள் உண்டு. சரியான ஓய்வின்மை, உடல் சூடு, காலநிலையில் ஏற்படும் மாற்றம், மன அழுத்தம், அதிக எண்ணெய் சார்ந்த உணவுகள் என்பன பருக்கள் ஏற்படுவதற்கான காரணங்களாக கூறப்படுகின்றன.
அந்த வகையில் முக அழகைக் கெடுக்கும் பருக்கள் வராமல் தடுக்க என்ன செய்யலாம் எனப் பார்ப்போம்..
image - Munson Healthcare
தற்போது மன அழுத்தம் இல்லாதவர்களை காண்பது அரிதிலும் அரிதாகிவிட்டது. யாரைப் பார்த்தாலும் ஏதோ ஒரு காரணத்துக்காக மன உளைச்சலுக்கு உள்ளாகியிருப்பர். இந்த மன அழுத்தமானது மனதுக்கு மட்டுமில்லாமல் முக அழகையும் கெடுக்கின்றது. பருக்கள் ஏற்படுவதற்கு மன அழுத்தமும் ஒரு காரணமாக கருதப்படுகிறது. எனவே தியானம், யோக, உடற்பயிற்சி என்பவற்றால் மன அழுத்தத்தை குறைக்கலாம்.
image - Zoic Biotech
சிலர் மாதவிடாய், கருத்தரிப்பு பிரச்சினைகளுக்காக ஹோர்மோன் மாத்திரைகளை உபயோகிப்பார்கள். இந்த மாத்திரைகளின் உபயோகத்தில் மாற்றம் செய்வதன் மூலம் முகப்பருக்கள் வராமல் தடுக்கலாம்.
image - Allure
பொதுவாகவே பருக்களை கிள்ளி உடைக்கும் பழக்கம் அனைவருக்கும் உண்டு. இவ்வாறு செய்வதனால் குறிப்பிட்ட பக்டீரியா சருமத்தின் ஏனைய பகுதிகளுக்கும் பரவி விடும். எனவே பருக்களை கிள்ளுவதை நிறுத்த வேண்டும்.
image - Avail Dermatology
முகத்தை ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று தடவைகள் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் முகத்திலுள்ள அழுக்குகள் வெளியேறி, முகப்பருக்கள் வருவதை தடுக்கலாம்.
image - Vikatan
பொடுகு, பேன் போன்றவற்றினாலும் முகப்பரு ஏற்பட வாய்ப்பிருக்கின்றது.
image - Allure
சருமத்துக்கு பயன்படுத்தும் பொருட்களில் அதிகளவான எண்ணெய் உள்ளதா? என்பதை பார்த்து வாங்க வேண்டும். ஏனென்றால் எண்ணெய் அதிகரித்தால் முகப்பரு பரவுவது அதிகமாகும்.
image - Daily mail
குளிக்கும்போது நாம் பயன்படுத்தும் ப்ரஷ் போன்றவை சுத்தமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் இதிலிருந்து பக்டீரியா பரவி பருக்களை உண்டுபண்ணும்.
image - Freepik
சருமத்தை கரடு முரடான துணியில் அழுத்தி துடைப்பதால் தோல் சிவந்துபோதல், சரும எரிச்சல் போன்றவை ஏற்படுகின்றது. இது பருக்களை வெடிப்புக்குள்ளாக்கி ஏனைய பகுதிகளுக்கும் பரவ வழி சமைக்கின்றது.