முக அழகை அதிகரிக்கும் பீட்ரூட் ஃபேஸ் பேக்! ஈஸியா தயார் செய்வது எப்படி?
நமது அழகை மேம்படுத்துவதற்கு பல பொருட்கள் நம் கண் பார்வையைச் சுற்றி இருக்கின்றன. அவற்றுள் முக்கியமான ஒன்று பீட்ரூட். பீட்ரூட் சமையலுக்கு மாத்திரமல்ல நமது அழகை மேம்படுத்திக் கொள்ளவும் பல உதவிகள் செய்கின்றன.
இந்த பீட்ரூட்டிலுள்ள ஊட்டச்சத்துக்கள் சருமத்தை மென்மையாகவும் இளமையாகவும் வைத்துக் கொள்ள உதவும். இந்த பீட்ரூட்டை வைத்து எவ்வாறு ஃபேஸ் பேக் செய்யலாம் என்று பார்ப்போம்.
ஃபேஷியல் - 1
தேவையான பொருட்கள்
பீட்ரூட் - 1
தேன் - 2 கரண்டி
அரிசி மா - 2 கரண்டி
செய்முறை
முதலாவதாக பீட்ரூட்டை எடுத்து அதன் தோலை நீக்கிவிட்டு,நன்றாக துருவிக் கொள்ளுங்கள்.
துருவிய பீட்ரூட்டிலிருந்து சாறு பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
அந்த சாற்றுடன் இரண்டு ஸ்பூன் தேன், இரண்டு ஸ்பூன் அரிசி மா இரண்டையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு இந்த ஃபேஸ் பேக்கை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
ஃபேஷியல் - 2
தேவையான பொருட்கள்
பீட்ரூட் - 1
எலுமிச்சை - பாதி
ஊறவைத்த அரிசி - 1 கரண்டி
கற்றாழை ஜெல் - 2 ஸ்பூன்
செய்முறை
பீட்ரூட்டை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
பின்னர் அவற்றை மிக்ஸியில் சேர்த்து ஒரு கரண்டி ஊறவைத்த அரிசி, எலுமிச்சை பாதி, கற்றாழை ஜெல் 2 கரண்டி அனைத்தையும் ஒன்றாக சேர்த்து பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளுங்கள்.
இதை முகத்தில் அப்ளை செய்து மசாஜ் செய்து, 15 நிமிடங்களின் பின்னர் குளிர்ந்த நீரால் கழுவவும்.