வித்தியாசமான பனீர் ஒம்லேட் செய்து பார்க்கலாமே
முழுக்க முழுக்க பாலிலிருந்து பெறப்படும் ஒரு உணவு பனீர் . இது உண்பதற்கு சுவையாக இருக்கும் என்பதோடு, அதிக சத்தும் நிறைந்தது. இதில் பொட்டாசியம் மற்றும் செலினியம் என்பவை உள்ளடங்கியிருப்பதால் உடலுக்கு உடனடி ஆற்றலைக் கொடுப்பதோடு,பல உடல் செயல்பாடுகளுக்கும் உதவுகின்றது.
இனி வித்தியாசமான பனீர் ஒம்லேட் எவ்வாறு செய்வதென்று பார்ப்போம்...
தேவையான பொருட்கள்
பனீர் - 1/2 கப்
முட்டை - 5
பச்சை மிளகாய் - 4
உப்பு - தேவையான அளவு
மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் பனீரை துருவிக் கொள்ளவும்.
பின்னர் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் பனீர், மிளகுத்தூள், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கலந்து கொண்டு, அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும்.
இறுதியாக முட்டையை உடைத்து ஊற்றி சுற்றி வர எண்ணெய் விட்டு வேகவிடவும்.
இப்போது வித்தியாசமான பனீர் ஒம்லேட் தயார்.