அம்மாவிற்கு மாப்பிள்ளை தேடி திருமணம் செய்து வைத்த மகன்!
நானே என் அம்மாவுக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்தேன் என நீயா நானாவில் ஒரு இளைஞர் ஒருவர் பேசிய காட்சி பார்ப்பவர்களை பூரிப்படைய வைத்துள்ளது.
நீயா நானாவின் தூண் இவர் தானாம்
பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங் முதலில் ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் 'நீயா நானா'. இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் பல உண்மையான விடயங்கள் மற்றும் மக்கள் சமூகத்திற்கு தேவையான விடயங்கள் பேசப்படுவதால் கோபிநாத் ஷோ என்றாலே அனைவருக்கும் பிடித்தமான நிகழ்ச்சியாக மாறியுள்ளது.
இதில், இரண்டு தரப்புகள் இருப்பார்கள் அவர் அவர் பக்கங்களில் உள்ள சரியான கூற்றை கூறுவார்கள். அதில் எது சமுக பார்வைக்கு ஏற்றதோ அதனை கோபிநாத் குறிப்பாக எடுத்து பேசுவார்.
இது மட்டுமல்ல கோபிநாத் நிகழ்ச்சி தொகுப்பாளர் மட்டுமல்ல ஒரு வானொலி கலைஞர், பேச்சாளர், விவாதிப்பவர், சிறந்த மனிதர் என பல திறமைகள் இவரினுள் இருக்கிறது. இதனாலே இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம்.
நானே என்னுடைய அம்மாவிற்கு திருமணம் செய்து வைத்தேன்
இந்த நிலையில், “ எனது அப்பா இறந்த நிலையில் எனது அம்மா தான் மூன்று ஆண்டுகளாக தனிமையில் இருந்து பிள்ளைகளை படிக்க வைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து இதனை கவனித்த ஒரு ஆசிரியர் அம்மாவிற்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்குமாறு என்னிடம் கூறினார்.
இதன்பின்னர் உனக்கு அம்மாவின் தனிமை விளங்கியது, இதனால் என்னுடைய அம்மாவிற்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்தேன்” என இளைஞரொருவர் கூறியுள்ளார்.
தனக்கான வாழ்க்கையை மட்டும் பார்க்கும் பிள்ளைகள் இருக்கும் நிலையில், அம்மாவின் தனிமை குறித்து யோசித்த இளைஞரின் செயல் பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதனை நீயா நானாவில் அப்பட்டமாக ஒப்புக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் பெற்றோர்களின் உணர்வை புரிந்துக் கொள்ளாத பலருக்கு முன்னுதாரணமாக இருந்து வருகிறது.