விருந்து வைத்த விஜயின் மனைவி ! காமெடி நடிகைக்கு வந்த முதல் திருமண பரிசு என்ன தெரியுமா? அசத்திய ரஜினி
காமெடி நடிகை ஆர்த்தியின் திருமணத்தின் போது முதல் விருந்து தளபதி விஜய் வீட்டில் நடந்ததாக பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
தற்போது விஜய் தொலைக்காட்சியில் பிபி ஜோடிகள் நிகழ்ச்சிகள் நடக்கிறது.
இதில் கடந்த வார ரவுண்டில் திருமண நிகழ்வு நடந்தது. அந்த திருமண நிகழ்வில் நடிகை ஆர்த்தி அவரின் திருமணத்தின் போது நடந்த பல விடயங்களை பகிர்ந்து கொண்டார்.
காமெடி நடிகை ஆர்த்தியின் திருமண பரிசுகள்
அதில் ஆர்த்தியின் முகூர்த்த புடவையை சூப்பஸ்டார் ரஜினி வாங்கி கொடுத்ததாக கூறி நெகிழ்ந்தார்.
அதே சமயம், கலைஞர் கருணாநிதி நேரில் சென்று வாழ்த்து கூறியதாகவும் குறிப்பிட்டார். அது மட்டும் இல்லை , முதல் திருமண பரிசு நடிகர் விஜயகாந்திடம் இருந்து தான் ஆர்த்திக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், மறக்க முடியாத ஒரு விடயம் என்ன என்றால் ஆர்த்தியின் முதல் விருந்து தளபதி விஜய் வீட்டில் நடந்ததாம்.
நடிகர் விஜயின் மனைவி சங்கீதா அவர் கையால் உணவு சமைத்து பரிமாறியுள்ளார். இந்த விடயத்தை ரசிகர்கள் தற்போது சமூக ஊடகத்தில் பகிர்ந்து வருகின்றனர்.