சல்லி சல்லியாய் நொருங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்! நச் என பதிலடி கொடுத்த ஜீவா
ஜீவாவை வைத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை பிரிக்க திட்டம் போடும் மீனாவின் அப்பாவிற்கு நச் என ஒரு பதிலடி கிடைத்துள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸில் புதிய திருப்பம்
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக செல்லும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலுள்ள மூர்த்தி, கதிர், கண்ணன், ஜீவா என நான்கு சகோதரர்களும் நான்கு குடும்பமாக பிரிந்து தன்னுடைய வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள்.
இவர்களுக்கு மீனாவின் தங்கை திருமணத்தில் தான் சண்டை ஆரம்பித்தது. ஜீவா தற்போது மீனாவின் அப்பாவின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறார்.
மீனாவின் அப்பா தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை விட்டு மீனாவின் கணவரான ஜீவாவை பிரித்து வைத்துள்ளார். இந்த நிலையில் அடுத்தடுத்து என்ன நடக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.
நச் என ஒரு பதிலடி
அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையை எப்படியாவது வீழ்த்தி விட வேண்டும் என மீனாவின் அப்பா கணக்கு போட்டு கொண்டிருக்கிறார்.
இவரின் சதி திட்டத்திற்கு ஜீவா ஒத்து வராதது போல் பதிலடி கொடுத்துள்ளார். இதனால் மீனாவின் அப்பாவின் முகம் சற்று சோர்வடைந்துள்ளது.
இந்த சீரியலில் வரும் டுவிஸ்ட்களை பார்த்து விட்டு ரசிகர்கள்,“ எப்படியாவது குடும்பம் சேர்ந்து விட வேண்டும்” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.