அண்ணனின் திருமணத்தில் அலறவைத்த தங்கை! செய்த காரியம் என்ன?
அண்ணனின் திருமணத்திற்கு தங்கை ஒருவர் வெளிநாட்டில் இருந்து வந்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ள காணொளி வைரலாகி வருகின்றது.
பொதுவாக திருமணம் என்றாலே உறவினர்கள், சொந்தங்கள், நண்பர்கள் என மகிழ்வான தருணங்களின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகின்றது.
இந்த நிகழ்வில் தனது அன்புக்குரியவர் வராமல் சென்றால் நம்மால் அந்த வருத்தத்தினை ஈடு செய்யவே முடியாத நிலையாகும். இங்கும் ஷர்த்தா ஷெலெர் என்பவர் தனது இன்ஸ்டாகிராமில் காணொளியினை வெளியிட்டு்ள்ளார்.
இதில் தனது அண்ணனின் திருமணத்திற்கு சர்ப்ரைஸாக வந்து இறங்கியுள்ளார். பெண்ணை அவதானித்த பெற்றோர்கள் கண்கலங்கி கட்டிப்பிடித்து வரவேற்றுள்ளனர்.
இதுகுறித்து ஷர்த்தா கூறுகையில்,"ஆச்சர்யமான பயணத்தின் பின்னணியில் உள்ள கதை இது. நீங்கள் எங்கிருந்தாலும் குடும்பம் மிகவும் முக்கியமானது,
எல்லா சூழ்நிலைகளிலும் நீங்கள் அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதை நான் உணர்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.