பாண்டியன் ஸ்டோர்ஸில் புது முல்லை யார் தெரியுமா? இரகசியமாக நடக்கும் ஷூட்டிங்!
விஜய் டிவியின் ஒளிபரப்படும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்து வந்த நடிகை காவ்யா அறிவுமணி, அந்த தொடரில் இருந்து விலகுவதாக சமீபகாலமாக தகவல்கள் கசிந்து வந்ததை தொடர்ந்து நேற்றைய தினம் இதனை அதிகார பூர்வமாக உறுதிபடுத்தியுள்ளார்.
இந்த தகவல் முல்லை ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
தற்போது மிக விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஒன்று. இதில் முல்லை கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் தனி வரவேற்பு இருந்தது.
தொடர் ஆரம்பத்தில் முல்லையாக நடித்த சித்ராவுக்கென ரசிகர்கள் கூட்டமே காணப்பட்டது. இந்நிலையில் சித்ராவின் தற்கொலைக்கு அடுத்து முல்லையாக வந்த காவ்யா முல்லையாக ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளும் போது இத்தொடரிலிருந்து விலகியுள்ளார்.
முல்லையாகும் லாவண்யா
இந்நிலையில் தற்போது முல்லையாக வருகிறார் சிப்பிக்குள் முத்து தொடரில் ஹீரோயினாக நடித்து வந்த லாவண்யா. இவர் தான் முல்லை வேடத்தில் சரியாக இருப்பார் என தகவல் வெளியாகியுள்ள நிலையில் லாவண்யா தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஷூட்டிங்கில் பங்கேற்று நடித்து வருகிறாராம்.
இது முல்லை ரசிகர்களுக்கு கவலையை தரும் விடயமாக இருந்தாலும் அடுத்த முல்லையின் வரவேற்பு குறித்து பொறுத்திருந்துப் பார்க்கலாம்.