சரும பிரச்சினைகளுக்கு கருவேப்பிலை தான் தீர்வு: பியூட்டி சிக்ரேட் சொன்ன பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் லாவண்யா தற்போது தனது பியூட்டி சீக்ரெட்களை பகிர்ந்திருக்கிருக்கிறார். மேலும், இவர் பகிர்ந்த அத்தனை விடயங்கள் அனைத்தும் இயற்கையான மருத்துவம் தான்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை
குடும்ப ஒற்றுமையையும் அண்ணன் தம்பிகளின் பாசப் பிணைப்பையும் பறைசாற்றும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த சீரியல் இரவு 8.30 மணிக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். இந்தப் பாசக்கதையை கேட்கவே பல ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இந்தக் குடும்பத்தில் 4 அண்ணன் தம்பிகள் இருக்கின்றார்கள். இவர்கள் நால்வரும் தற்போது திருமணம் செய்து விட்டார்கள். இவர்களின் மூன்றாவது தம்பியான கதிரின் மனைவியாக நடிப்பவர் தான் முல்லை என்கின்ற லாவண்யா.
இவர் இவர் இதற்கு முன் சிப்பிக்குள் முத்து என்ற சீரியலின் மூலம் நம் அனைவருக்கும் பரீட்சமாகியிருந்தார். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லையாக நடித்து வருகிறார்.
இந்தக் கதாப்பாத்திரத்தில் முதன் முதலாக சித்ரா தான் நடித்து வந்தார். அவர் உயிரிழந்து விடவும் அவருக்கு பதிலாக காவ்யா அறிவுமணி நடித்திருந்தார், அவரும் இந்த சீரியலில் இருந்து விலகவே அவருக்கு பதிலாக லாவண்யா முல்லையாக மாறினார். இவரும் அவர்களைப் போலவே, அவர்களின் இடத்தை நிரப்பி அழகாக நடித்து வருகிறார்.
பியூட்டி டிப்ஸ்
இந்நிலையில் இவர் தனது அழகிற்காக இயற்கை ரகசியங்களை வெளிப்படையாக கூறியிருக்கிறார். இதில் இவர் கூறிய அனைத்து தகவல்களும் பெரும்பாலும் இயற்கையில் இருந்து கிடைக்ககூடிய பொருட்கள் தான்.
அதாவது, நெல்லிக்காய் முதலில் கசப்பாக இருந்தாலும் பிறகு இனிப்பது போல அது உடலுக்கு மிகவும் நன்மையைத் தரும். இது சருமத்திற்கு அதிக பளபளப்பை தரும்.
கருவேப்பிலை பொதுவாக முடியை கருமையாக்க உதவும். அதுமட்டுமில்லாமல் சருமத்தில் இருக்கும் கரும்புள்ளிகளுக்கும் கறிவேப்பிலை ஜூஸ் நல்லது. ஆனால் இதை தினமும் எடுத்துக் கொள்ள கூடாது.
கற்றாழையானது உடம்பின் வெப்பநிலையை பேணி பராமரிக்கும். மேலும், இதனை உங்கள் டயட்டிலும் சேர்த்துக் கொள்ளலாம். இது உங்களுக்கு இளமையான தோற்றத்தை கொடுக்கும்.
மேலும், கற்றாழையின் தோலை நீக்கி விட்டு ஓடும் நீரில் 7, 8முறை கழுவி விட்டு சாப்பிட்டால் மாதவிடாய் பிரச்சினைகளுக்கு தீர்வாக இருக்கும்.