பிரபல இயக்குநர் மரணம்! முதல்வர் மற்றும் உதயநிதி நேரில் அஞ்சலி... பேரதிர்ச்சியில் திரையுலகம்
முத்தமிழறிஞர் கலைஞர் முரசொலியின் எழுத்தாளர்களில் ஒருவரானவரும் பிரபல இயக்குநருமான சொர்ணம் காலமானார்.
இவரது மறைவுக்கு நேரில் சென்று முதல்வர் ஸ்டாலின் மற்றும் நடிகர் உதயநிதி அஞ்சலி செலுத்தியதுடன் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் 17 படங்களுக்கு உரையாடல்களை எழுதிய இவர், முத்தமிழறிஞர் கலைஞர் எழுத்தில் ஸ்டாலின் நடித்து உருவான‘ஒரே ரத்தம்’ திரைப்படம் உட்பட பல படங்களை இயக்கியவர்.
முதல்வர் ஸ்டாலின் நடத்திவந்த இளைய சூரியன் வார ஏட்டின் பொறுப்பாசிரியராகவும் சொர்ணம் பணியாற்றியதுடன், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் செயலாளராகவும், தமிழ்நாடு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிக் கல்லூரியின் தலைவராகவும், தமிழ்நாடு திரைப்படப் பிரிவுத் தலைவராகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில் இதுபற்றி பேசிய உதயநிதி ஸ்டாலின், தமது ட்விட்டரில், “முத்தமிழறிஞருடன் முரசொலியிலும், கழக தலைவர் அவர்கள் நடத்திய இளையசூரியன் ஏட்டிலும் முக்கிய பொறுப்புகளை வகித்தவர்.
திரைப்பட இயக்குனர் - வசன கர்த்தா - அரசியல் என இயங்கிய சொர்ணம் மாமா அவர்களின் மறைவையடுத்து அவரது உடலுக்கு இன்று மரியாதை செய்தோம். குடும்பத்தாருக்கு ஆறுதல்-ஆழ்ந்த இரங்கல்!” என குறிப்பிட்டுள்ளார்.