கவலைக்கிடமாகும் தனத்தின் நிலைமை: பாண்டியன் ஸ்டோர்ஸில் பரபரப்பான திருப்பங்கள்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதனை மையாக வைத்து கதையின் அடுத்த கட்டம் இப்படித்தான் இருக்கும் என்பதை கணித்திருக்கிறார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
சீரியல் குடும்ப ஒற்றுமையையும் அண்ணன் தம்பிகளின் பாசப் பிணைப்பையும் பறைசாற்றும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் இரவு 8.30 மணிக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்.
இந்த நான்கு அண்ணன் தம்பிகளும் திருமணம் முடித்து ஒன்றாக ஒரே வீட்டில் சண்டை சச்சரவுகள் இல்லாமல் வாழ்வார்களா இல்லையா? என்பது தான் தொடரின் கதையாக தற்போது நகர்ந்துக் கொண்டிருக்கிறது.
தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் மூன்றாக பிரிந்து எல்லோரும் தனித்தனியே இருந்த நிலையில் ஜீவா - மீனாவைத் தவிர மற்ற அண்ணன்கள் எல்லாம் வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் தான் தனத்திற்கு புற்றுநோய் இருப்பது அறிந்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் இந்த வீட்டில் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதை மேலோட்டமாக கணிக்கப்பட்டுள்ளது.
அடுத்து நடக்கப்போவது என்ன?
அடுத்து நடக்கப்போவது என்ன? தனத்திற்கு ஏற்பட்ட இந்த நிலைமையை வீட்டில் யாருக்கும் சொல்லாமல் மீனாவும் தனமும் மறைத்து வருகிறார்கள்.
ஆனால் இந்த விடயம் வீட்டில் இருப்பவர்களுக்கு தெரிந்தால் என்ன நடக்கும் கதையை எப்படிக் கொண்டுப்போகப்போகிறார்கள் என்பது தெரியாமல் மக்கள் பெரும் குழப்பத்தில் இருந்து வருகிறார்கள்.
மூர்த்திக்கு ஏற்கனவே நெஞ்சு வலி இருக்கின்ற நிலையில் இந்த விடயத்தை சொன்னால் மூர்த்தியின் நிலைமை என்ன ஆகுமோ என்ற எதிர்ப்பார்ப்பில் இருக்கிறார்கள்.
மேலும், இப்போது தனமும் மீனாவும் வீட்டிற்கு தெரியாமல் ஸ்பெஷல் டாக்கரை பார்க்கப் போகிறார்கள். மருத்துவ செலவுகளுக்கு என்ன செய்யப் போகிறார்கள், தனம் உயிர் பிழைப்பாரா என்று அடுத்தடுத்து பல பரபரப்பான தருணங்களைக் கொடுத்து வருகிறார்கள்.
மறுபக்கம் இதெல்லாம் வெறும் பொய் உங்களுக்கு ஒன்றுமில்லை என்று சொல்லி விட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். தனம் பிரச்சினை ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் கண்ணன் பேங்கில் அடுத்தடுத்து லஞ்சம் வாங்கிக் கொண்டிருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |