ஐஸ்வர்யாவால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் வெடித்த சண்டை: இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகுதோ?
லட்சுமி அம்மாள் இறந்த பின்னர் சோகமாக இருந்த வீடு, தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக நார்மலாக மாறிக்கொண்டிருக்கிறது.
இதற்கிடையெ கண்ணன்- ஐஸ்வர்யா எதிர் வீட்டில் வந்து குடியேற சில சுவாரசிய சம்பவங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
இதுவே பிரச்சனைகளுக்கு அடித்தளமாக மாறிவிட்டது எனலாம், அதாவது ஐஸ்வர்யாவிடம் மீனா பேச பாண்டியன் ஸ்டோர்ஸில் சண்டைகள் தொடங்கிவிட்டன.
இன்றைய எபிசோடில், கயல் அழுகும் சத்தம் கேட்டு கண்ணன் அவளை தூக்கி வெளியே வருகிறான், அவளை சமாதானப்படுத்திக் கொண்டிருக்கும் போது மூர்த்தி அதை பார்த்து கோபமாக கத்துகிறார்.
குழந்தை அழுகுற சத்தம் கூட கேட்காம அப்படி என்ன வேலை பார்த்துட்டு இருக்கீங்க. கயலை பார்த்துக்க ஆளே இல்லையா? என கத்துகிறான்.
இதனால் பிரச்சனை தொடங்க, மறுநாள் மீனா கோலம் போட வெளியே வரும்போது ஐஸ்வர்யாவிடம் பேசிக் கொண்டிருக்கிறாள்.
இதைப்பார்த்த முல்லை, அவகிட்ட ஏன் பேசுறீங்க. ஏற்கனவே இந்த வீட்ல நெறைய பிரச்சனை இருக்கு என சொல்லும் போது மீனா அவளிடம் சண்டைக்கு போடுகிறாள். அதை பார்த்து ஜீவாவும், கதிரும் அவர்களிடம் வந்து என்ன பிரச்சனை என விசாரிக்கின்றனர்.
மீனா கதிரிடம் நான் ஐஸ்வர்யா கிட்ட ரெண்டு வார்த்தை பேசுனதுக்கு இவுங்க ஏதோ மாமியார் மாதிரி என்கிட்ட வந்து கேள்வி கேட்டுட்டு இருக்காங்க? நீங்களே இந்த நியாயத்தை கேளுங்க என சொல்கிறாள்.
அப்போது கதிர் அவளை கிண்டல் செய்து சமாளித்து விடுகிறான். மீனாவும் அவள் கலாய்ப்பது தெரியாமல் சிரித்து கொண்டு போய் விடுகிறாள்.
இதை தொடர்ந்து புதிய கடையை பற்றி ஜீவா தனத்திடம் பேசிக் கொண்டிருக்கும் போது, மீண்டும் மீனா- முல்லைக்கு இடையே பிரச்சனை வெடிக்கிறது.
உடனே தனம், இரண்டு பேரும் ஏன் இப்படி பேசிக்கிறீங்க? என்ன ஆனது என விசாரிக்க ஜீவா- கதிர் விளக்குவதுடன் இன்றைய எபிசோட் முடிந்து விடுகிறது.