பிக்பாஸ் கொடுத்த சர்ப்ரைஸ்: உடைந்த அழுத போட்டியாளர்கள்! பரபரப்பான ப்ரோமோ
பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளர்கள் முன்பு அமுதவாணனின் மனைவி அமுதவாணனை கட்டி தழுவிக் கொண்டுள்ளார்.
வெளியேறிய நபர்
பிரபல தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 6 மிகவும் விறுவிறுப்பாகச் சென்றுக் கொண்டிருக்கிறது. இதில் சுமார் 21 பிரபலங்கள் பங்கேற்றார்கள்.
மேலும் பிக் பாஸ் வீட்டின் நிபந்தனையின் வாரத்திற்கு ஒரு போட்டியாளர் வீதம் பிக் பாஸ் வீட்டிலிருந்து சுமார் 10 மேற்பட்ட போட்டியாளர்கள் குறைவான வாக்குகள் பெற்று வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேலும் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் முக்கிய போட்டியாளரான தனலெட்சுமி குறைவான வாக்குகள் பெற்றதாக வெளியேற்றப்பட்டுள்ளார்.
பிக் பாஸ் கொடுத்த சப்ரைஸ்
இந்நிலையில் இந்த வாரம் அனைவருக்கும் ப்ரீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களின் குடும்பத்திலுள்ளவர்களை பிக் பாஸ் வீட்டிற்கு வரவழைத்துள்ளனர்.
இதனால் பிக் பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களும் மகிழ்ச்சியில் பொங்கியுள்ளனர்.
அந்த வகையில் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.