பாண்டியன் ஸ்டோர்ஸில் கதிரின் திடீர் மாற்றம்: சந்தோஷத்தில் துள்ளிக்குதித்த முல்லை
பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் என்பது நாம் அறிந்த ஒன்றே. அதிலும் கதிர்- முல்லை ஜோடிக்காகவே பாண்டியன் ஸ்டோர்ஸை பார்ப்பவர்கள் அதிகம். இருவருக்குள்ளும் இருக்கும் கெமிஸ்ட்ரி அந்த மாதிரி, சில நாட்களாகவே இருவரும் ரொமான்ஸில் வெளுத்து வாங்குகின்றனர்.
பல பிரச்சனைகளை தாண்டி பரபரப்பான கட்டங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கும் சீரியலில் கதிர் புதிதாக அவதாரம் எடுக்கப் போகிறாராம்.
அதாவது, 10ம் வகுப்பு வரை படித்துள்ள கதிர் மேற்படிப்பு படிக்கவிருக்கிறார், இதற்கு முல்லையும் பக்கபலமாக இருக்கிறார். இருவரும் படிப்பு பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது, இதை வீட்டில் கூறினால் என்ன நினைப்பார்கள் என கதிர் கேட்க, அப்போ வீட்டில் யாருக்கும் தெரியவேண்டாம் என முல்லை கூறுகிறார். கதிர் படிப்பதை வீட்டில் கூறுவாரா? அல்லது மறைப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.