முட்டையை இப்படி வறுவல் செய்து பாருங்க.. சுவை அட்டகாசமாக இருக்கும்
பள்ளிப்பாளையம் ஸ்டைலில் முட்டை வறுவல் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
முட்டை
சத்துக்கள் நிறைந்த முட்டையை பல வகைகளில் சமைத்து சாப்பிடும் நிலையில், குழந்தைகளுக்கு பிடித்தமாதிரி முட்டை வறுவல் செய்து அசத்தலாம்.
அசைவ உணவில் முட்டை சற்று விலை குறைவாக இருக்கும் நிலையில், நடுத்தர மக்கள் வாங்கி சாப்பிடவும் செய்கின்றனர்.
இந்நிலையில் பள்ளிப்பாளைய முட்டை வறுவல் தற்போது பிரபலமாகி வரும் நிலையில், இதனை எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இதனை சாம்பார், ரசம், தயிர் சாதத்துடன் வைத்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாகவே இருக்குமாம்.

தேவையான பொருட்கள்
5 முட்டைகளை(வேகவைத்து தோலுரித்தது)
15 வர மிளகாய்
5 பூண்டு பல்
1/2 ஸ்பூன் மிளகுத்தூள்
1/4 ஸ்பூன் சோம்புத்தூள்
1 ஸ்பூன் கொத்தமல்லித்தூள்
1/4 ஸ்பூன் கரம் மசாலா
1/4 ஸ்பூன் சீரகத்தூள்
2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
4 விதை நீக்கிய வர மிளகாய்
2 கொத்து கறிவேப்பிலை
3 ஸ்பூன் நறுக்கிய தேங்காய்த் துண்டுகள்
1 பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது)
10 சின்ன வெங்காயம் (நறுக்கியது)
1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
1 தக்காளி (பொடியாக நறுக்கியது)
1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
தேவையான அளவு உப்பு

செய்முறை
முதலில் முட்டையை சிறிதளது உப்பு சேர்த்து வேக வைத்து, ஓட்டை நீக்கி இரண்டு அல்லது நான்கு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளலாம்.
கடாயில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து காய்ந்த மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து ஒரு 3 நிமிடம் வேக வைத்து, அதனை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
இப்பொழுது கடாய் ஒன்றில் எண்ணெய் சேர்த்து, அரைத்த மிளகாய் விழுதுடன், மிளகு தூள், மல்லித் தூள், சோம்பு தூள், கரம் மசாலா, சிக்கன் மசாலா, சீரகத்தூள் ஆகியவற்றை சேர்த்து 3 நிமிடம் வதக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.

மற்றொரு கடாயில் எண்ணெய் சேர்த்து, விதை நீக்கிய காய்ந்த மிளகாயை அரை நிமிடம் வதக்கிய பின்பு, கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும்.
இதனுடன் தேங்காய் துண்டுகளையும் சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளவும். இதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
பின்பு தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கிய பின்பு, தயார் செய்துள்ள மிளகாய் மசாலா விழுதை சேர்க்கவும். சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

பின்பு சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியான பதத்திற்கு வரும் வரை கொதிக்க வைத்து, கடைசியாக முட்டை துண்டை சேர்த்து கலந்துவிடவும்.
குறித்த கலவையில் ஈரப்பதம் வற்றும் வரை 3 நிமிடம் கடாயில் விட்டு பின்பு இறக்கினால் பள்ளிப்பாளைய முட்டை மசாலா தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |