சாப்பாடுக்கு வழியில்லாமல் பிச்சை எடுக்கும் நிலையில் காமெடி நடிகர்... வெளியிட்ட காணொளி
பிரபல காமெடி நடிகர் பாவா லக்ஷ்மணன் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் இருந்த நிலையில், லெஜண்ட் சரவணன் அவருக்கு உதவி செய்துள்ளார்.
நடிகர் பாவா லக்ஷ்மணன்
நடிகர் பாவா லக்ஷ்மணன் பல திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார். இவ்வாறு மற்றவர்களை சிரிக்க வைத்தவர் தற்போது மிகவும் கஷ்டத்தில் இருப்பதாக கூறியுள்ளார்.
அதாவது இவர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இவரது கால் விரல்களும் அறுவை கிசிச்சை மூலமாக அகற்றப்பட்டுள்ளது.

இதனால் படவாய்ப்பு எதுவும் இல்லாத நிலையில் கஷ்டப்பட்டு வருகின்றார். சமீபத்தில் காணொளி ஒன்றினையும் வெளியிட்டிருந்தார்.
சாப்பாடு, மருத்துவ செலவிற்கு கூட பணமில்லாமல் தவிப்பதாகவும், வீட்டை காலி செய்ய கூறுகின்றனர், பிச்சை எடுக்கும் நிலையில் தான் இருப்பதாகவும், முதல்வர் விஜய் தனக்கு உதவி செய்ய வேண்டும் என்று உருக்கமாக பேசியுள்ளார்.
இந்நிலையில் நடிகரும், தொழிலதிபருமான லெஜண்ட் சரவணன் பாவா லட்சுமணன் உதவி செய்துள்ளார். தனது உதவியாளர்களை அனுப்பி ரூ.2 லட்சத்திற்கான காசோலையை கொடுத்துள்ளார். இதற்கு பாவா லக்ஷ்மணன் நன்றி தெரிவித்துள்ள காணொளி வைரலாகி வருகின்றது.
காமெடி நடிகர் பாவ லக்ஷ்மணனுக்கு உதவிய லெஜண்ட் சரவணன் | Cool Suresh | Legend Saravanan | IBC Tamil#coolsuresh #bavalakshmanan #coolsuresh #ibctamil pic.twitter.com/hvIr8ZifdT
— IBC Tamil (@ibctamilmedia) June 22, 2026
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |