அசத்தல் சுவையில் தெலங்கானா ஸ்டைலில் மசாலா சிக்கன் ... பண்ணலாமா?

Healthy Food Recipes
By Vinoja Jun 22, 2026 01:00 AM GMT
Report

சிக்கன் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தனி விருப்பம்.எப்போதும் ஒரே மாதிரியான கிரேவி அல்லது வறுவல் செய்து சலித்துவிட்டதா?

அப்படியானால் இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக, காரசாரமான சுவையில் தெலங்கானா ஸ்டைல் சிக்கன் மசாலாவை செய்து பாருங்கள்.

அசத்தல் சுவையில் தெலங்கானா ஸ்டைலில் மசாலா சிக்கன் ... பண்ணலாமா? | Tasty Telangana Chicken Masala Recipe In Tamil

தெலங்கானா சமையலின் சிறப்பம்சமே அதன் தைரியமான மசாலா சுவையும், நாக்கைத் தூண்டும் காரமும் தான். அதே தனித்துவத்தை இந்த சிக்கன் மசாலாவும் கொண்டுள்ளது. அரைத்து சேர்க்கப்படும் சிறப்பு மசாலா கலவையால் இந்த உணவின் மணமும் சுவையும் பல மடங்கு அதிகரிக்கிறது.

நாவூரும் சுவையில் கிராமத்து ஸ்டைல் சீரக மட்டன் குழம்பு - இப்படி செய்தா கொஞ்மும் மிஞ்சாது!

நாவூரும் சுவையில் கிராமத்து ஸ்டைல் சீரக மட்டன் குழம்பு - இப்படி செய்தா கொஞ்மும் மிஞ்சாது!

ஒருமுறை சாப்பிட்டால் மீண்டும் மீண்டும் செய்யத் தோன்றும் அளவுக்கு இதன் ருசி அசத்தலாக இருக்கும். இந்த தெலங்கானா சிக்கன் மசாலா சூடான சாதத்துடன் மட்டுமல்லாமல், இட்லி, தோசை, சப்பாத்தி, நான், புரோட்டா என எந்த உணவுடனும் பக்காவாக பொருந்தும்.

இந்த காரசாரமான தெலங்கானா ஸ்பெஷல் சிக்கன் மசாலாவை எப்படி செய்வது என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

அசத்தல் சுவையில் தெலங்கானா ஸ்டைலில் மசாலா சிக்கன் ... பண்ணலாமா? | Tasty Telangana Chicken Masala Recipe In Tamil

தேவையான பொருட்கள்

சிக்கன் – 1 கிலோ 

எண்ணெய் – 2 தே.கரண்டி 

வெங்காயம் – ¼ கிலோ (பொடியாக நறுக்கியது)

இஞ்சி – 2 இன்ச் துண்டு ( நறுக்கியது)

பூண்டு – 10 பற்கள் (நறுக்கியது)

கறிவேப்பிலை – 1 கொத்து

மஞ்சள் தூள் – ½ தே.கரண்டி

காஷ்மீரி மிளகாய்த்தூள் – ½ தே.கரண்டி

உப்பு – தேவையான அளவு

தண்ணீர் – தேவையான அளவு

எலுமிச்சைச் சாறு – ½ தே.கரண்டி

துருவிய தேங்காய் – 1 கப்

கொத்தமல்லித்தழை – அலங்கரிக்க

அசத்தல் சுவையில் தெலங்கானா ஸ்டைலில் மசாலா சிக்கன் ... பண்ணலாமா? | Tasty Telangana Chicken Masala Recipe In Tamil

அரைக்க தேவையானவை 

வர மிளகாய் – 7

மல்லி விதை – 2 தே.கரண்டி

சீரகம் – 1 தே.கரண்டி

மிளகு – 1 தே.கரண்டி

கசகசா – 1 தே.கரண்டி

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து  மிதமான தீயில் சூடாக்கி, வர மிளகாய், மல்லி விதை, சீரகம் மற்றும் மிளகை சேர்த்து நன்றாக வறுக்கவும். மல்லியின் நறுமணம் வரத் தொடங்கியதும் கசகசாவைச் சேர்த்து மேலும் 2–3 நிமிடங்கள் வறுக்கவும். பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.

அசத்தல் சுவையில் தெலங்கானா ஸ்டைலில் மசாலா சிக்கன் ... பண்ணலாமா? | Tasty Telangana Chicken Masala Recipe In Tamil

ஆறிய மசாலாவை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து தனியாக வைத்துக்கொள்ளவும். அதே கடாயில் துருவிய தேங்காயை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.

ஆறியதும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்து வைத்துக்கொள்ளவும். இஞ்சி மற்றும் பூண்டையும் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கி, நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

அசத்தல் சுவையில் தெலங்கானா ஸ்டைலில் மசாலா சிக்கன் ... பண்ணலாமா? | Tasty Telangana Chicken Masala Recipe In Tamil

வயிற்றுப்புண்ணுக்கு உடனடி நிவாரணம் தரும் மணத்தக்காளி வத்தல் குழம்பு... இப்படி செய்து பாருங்க

வயிற்றுப்புண்ணுக்கு உடனடி நிவாரணம் தரும் மணத்தக்காளி வத்தல் குழம்பு... இப்படி செய்து பாருங்க

பின்னர் இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். இஞ்சி-பூண்டின் பச்சை வாசனை நீங்கியதும் கறிவேப்பிலை மற்றும் தேங்காய் விழுதைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். அடிபிடிக்காமல் இருக்க சிறிதளவு தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

அதன் பிறகு சுத்தம் செய்த சிக்கன், மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள், அரைத்து வைத்துள்ள மசாலாப் பொடி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். அனைத்தையும் நன்றாகக் கிளறி, சிக்கனை 4 நிமிடங்கள் வதக்கவும்.

தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலக்கி, பாத்திரத்தை மூடி மிதமான தீயில் 20 நிமிடங்கள் வேகவிடவும். இடையிடையே கிளறிவிடவும்.

இறுதியாக எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித்தழை மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து கிளறினால் அவ்வளவு தான் அசத்தல் சுவையில் அருமையான தெலங்கானா ஸ்டைலில் மசாலா சிக்கன் தயார். 


 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US