மணமேடையில் மாப்பிளையை வெளுத்து வாங்கிய உறவினர்கள்.. நடந்தது என்ன?
மணமேடையில் மாப்பிள்ளையை உறவினர்கள் வெளுத்து வாங்கும் காணொளி இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.
சென்னை- பல்லாவரம் பகுதியை சேர்ந்த கிலிண்டன் என்பவர் பங்கு சந்தையில் முதலீடு செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அவர் பங்கு சந்தையில் எப்படி முதலீடு செய்து, லாபம் ஈடுவது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பல காணொளிகளையும், பேட்டிகளையும் பகிர்ந்துள்ளார்.
இதனை தொடர்ந்து அவர்களின் குடும்பத்திலுள்ளவர்கள் மற்றும் உறவினர்களிடம் கோடிக்கணக்கில் பணத்தை வாங்கி பங்கு சந்தையில் முதலீடு செய்துள்ளார்.
அதே போன்று பல்லாவரம் பகுதியை சேர்ந்த மோகன பிரியா என்ற பெண்ணிடம் ஆசையாக பேசி, பங்கு சந்தை வர்த்தகத்தை கற்றுக் கொடுத்துள்ளார்.

மணமேடையில் அசிங்கப்பட்ட மாப்பிள்ளை
இந்த நிலையில், மோகன பிரியாவிடம் இருந்து சுமாராக 75 லட்சம் ரூபாயை பணத்தை பங்கு சந்தையில் முதலீடு செய்து, லாபம் வாங்கி தருவதாகவும் கூறியிருக்கிறார். ஒருக்கட்டத்தில், மோகன பிரியாவின் பணத்திற்கு எந்தவித பதிலும் வரவில்லை என தெரிந்து, அவர் கிலிண்டனிடம் கேள்வியெழுப்பியிருக்கிறார்.
இதனை சமாளிப்பதற்காக தீவிரமாக செயற்பட்ட கிலிண்டன் மேலும் 62 லட்சம் வாங்கியிருக்கிறார். இவ்வாறு கோடிக்கணக்கில் பணத்தை வாங்கிய கிலிண்டன் யாருக்கும் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்துள்ளார்.

இது போன்று தொடர்ந்து செய்து வந்த கிலிண்டன் அவரது திருமண மேடையில் வசமாக சிக்கியுள்ளார். பணத்தை இழந்தவர்கள் திருமணத்திற்கு மாப்பிள்ளையை சரமாறியாக தாக்கிய, ரத்தம் சொட்ட சொட்ட அடித்து இழுத்து செல்கிறார்கள்.
இது தொடர்பில் பொலிஸாரிடமும் புகாரும் பதிவும் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |