Bigg Boss: கெமிக்கு விஜய்சேதுபதி கொடுத்த பரிசு.. இதன் விலை எவ்வளவு தெரியுமா?
நடிகர் விஜய் சேதுபதி கெமிக்கு வழங்கிய கண்ணாடியின் விலை என்ன என்பது தற்போது தெரியவந்துள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 24 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் 9 போட்டியாளர்கள் இதுவரை வெளியேறியுள்ளனர்.
மீதம் 15 போட்டியாளர்கள் விளையாடிவரும் நிலையில், இதில் 12 பேர் இந்த வாரம் நாமினேஷனில் இருந்து வருகின்றனர். இந்த வாரத்தின் தலைவராக சுபிக்ஷா இருந்து வருகின்றார்.
இந்நிலையில் கடந்த வாரத்தில் வெளியேற்றப்பட்ட கெமி மேடைக்கு வந்த போது பயங்கரமாக அழுது கொண்டிருந்தார். இவரது விளையாட்டை விஜய் சேதுபதி மிகவும் பாராட்டினார்.

விஜய் சேதுபதி கொடுத்த பரிசு
வீட்டை விட்டு எதிர்பார்க்காத சூழ்நிலையில் கெமி வெளியேறிய நிலையில், இவரால் அழுகையை அடக்கமுடியாமல் இருந்தது. மேலும் மேடையில் வைத்து கண்ணீர் தாரை தாரையாக கொட்டியுள்ளது.
இதனை பார்க்க முடியாத விஜய் சேதுபதி அவரது கண்ணீரை மறைப்பதற்கு தான் அணிந்திருந்த கண்ணாடியைக் கழற்றி கெமியிடம் கொடுத்தார்.

போட்டுக்கோங்க... சும்மா போட்டுக்கோங்க என்று கூறி கொடுத்ததுடன், கடைசியில் கெமி மேடையை விட்டு செல்லும் போது இந்த கண்ணாடியை வைத்துக் கொள்ளவா? என்று கேட்டார்.
இதற்கு விஜய் சேதுபதி தான் காசு கொடுத்து வாங்கியது... நான் கொடுக்கிறன்... வைச்சிக்கோங்க என்று கூறினார். மேலும் சக போட்டியாளர்கள் கண்ணாடி குறித்து கேட்கையில், அது கடந்த வாரம் தான் சிங்கப்பூரிலிருந்து வாங்கி வந்ததாக கூறினார்.
விஜய் சேதுபதியின் இந்த செயல் போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களையும் வாயடைக்க வைத்துள்ளது. இதன் விலை என்ன என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது விஜய் சேதுபதி துபாயில் வாங்கியுள்ள இந்த கண்ணாடியின் விலை 18 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |